புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில், செபத்தை வழிநடத்தும் கர்தினால் ஆஞ்சலோ தெ தொனத்திஸ் புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில், செபத்தை வழிநடத்தும் கர்தினால் ஆஞ்சலோ தெ தொனத்திஸ் 

உரோமில் மார்ச் 11, உண்ணா நோன்பு, செபம்

கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ள உரோம், இத்தாலி மற்றும், உலகிற்காக இறைவனின் உதவியை மன்றாடுவதற்கென, உண்ணா நோன்பு மற்றும் செப நாள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ள உரோம், இத்தாலி மற்றும், உலகிற்காக இறைவனின் உதவியை மன்றாடுவதற்கென, உண்ணா நோன்பு மற்றும் செப நாள் ஒன்றை அறிவித்துள்ளார், உரோம் மறைமாவட்ட திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால்  ஆஞ்சலோ தெ தொனத்திஸ்.

மார்ச் 06, இவ்வெள்ளியன்று, அரிச்சா விண்ணகப் போதகர் தியான இல்லத்தில், திருப்பீட உயர் அதிகாரிகளுடன் ஆண்டு தியானத்தை நிறைவுசெய்த கர்தினால் ஆஞ்சலோ தெ தொனத்திஸ் அவர்கள், உரோம் மரைமாவட்டத்தின் அனைத்து விசுவாசிகளுக்கும் அவசர மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கிருமி COVID-19வால் தாக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களுக்குச் சிகிச்சை வழங்குபவர்கள் ஆகிய அனைவருக்காகவும், மார்ச் 11, வருகிற புதன்கிழமையை, உண்ணா நோன்பு மற்றும் செப நாளாக கடைப்பிடிக்க அழைப்பு விடுத்துள்ளார், கர்தினால் தொனத்திஸ்.

மார்ச் 11ம் தேதி மாலை 7 மணிக்கு உரோம் திவினா அமோரே அன்னை மரியா திருத்தலத்தில் இக்கருத்துக்காகத் திருப்பலி நிறைவேற்றப்படும், அத்திருப்பலி Telepace தொலைக்காட்சியிலும் (அலைவரிசை 73 மற்றும், Sky அலைவரிசை 515), உரோம் மறைமாவட்ட முகநூலிலும் ஒளிபரப்பப்படும் என்று, கர்தினாலின் மடல் கூறுகிறது.

வருகிற புதனன்று நோன்பிருந்து ஒருவேளை உணவைத் தவிர்த்து, அந்தப் பணத்தை, இந்நோயாளிகளின் சிகிச்சைக்கென வழங்குமாறு கூறியுள்ள கர்தினால், இந்நாள்களை செபத்தில் செலவழிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2020, 15:33