பாலஸ்தீனாவிலுள்ள இயேசு பிறப்பு பெருங்கோவிலுக்கு முன் பாலஸ்தீன காவல் துறையினர் பாலஸ்தீனாவிலுள்ள இயேசு பிறப்பு பெருங்கோவிலுக்கு முன் பாலஸ்தீன காவல் துறையினர் 

பாலஸ்தீனாவில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன

பாலஸ்தீனாவில், கல்விநிலையங்களும், இயேசு பிறப்பு பெருங்கோவில் உட்பட, அனைத்து ஆலயங்களும், மசூதிகளும், 14 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி, COVID-19 நெருக்கடியைத் தொடர்ந்து, பாலஸ்தீனாவிலுள்ள அனைத்து புனித இடங்களும், 14 நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

கல்விநிலையங்களும், இயேசு பிறப்பு பெருங்கோவில் உட்பட, அனைத்து ஆலயங்களும், மசூதிகளும் மூடப்பட வேண்டும் என்று, மார்ச் 05, இவ்வியாழனன்று, பாலஸ்தீன நலவாழ்வு அமைச்சகம் வெளியிட்ட ஆணைக்கு ஒத்துழைக்கும் விதமாக, அறிக்கை வெளியிட்டுள்ள பேராயர் பிட்சபாலா அவர்கள், அரசின் கட்டளைக்கு விசுவாசிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பெத்லகேம் மற்றும், பெய்ட் ஜாலா பகுதியில், கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கம் உள்ளது என்ற செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, West Bankல், பெத்லகேம், பெய்ட் ஜாலா, பெய்ட் சாகூர் மற்றும் எரிக்கோ பகுதிகளில், அனைத்து பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மசூதிகள், மற்றும், இயேசு பிறப்பு ஆலயம் உட்பட ஆலயங்கள் அனைத்தும், 14 நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று பேராயர் பிட்சபாலா அவர்களின் அறிக்கை கூறுகிறது.

இத்தொற்றுக்கிருமி ஆபத்து ஏற்கனவே நம் மத்தியில் இருப்பதால், அரசு அதிகாரிகளுடன் நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், பேராயர் பிட்சபாலா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2020, 15:20