தென் கொரியாவில் Daegu மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது என்பதைக் கூறும் அறிவிப்பு தென் கொரியாவில் Daegu மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது என்பதைக் கூறும் அறிவிப்பு 

தென் கொரியாவில் 3 வாரங்களுக்கு திருப்பலிகள் இரத்து

Daegu உயர்மறைமாவட்டப் பகுதியில், கிறிஸ்தவக் கூட்டங்கள் நடைபெற்றபின், கொரோனா தொற்றுக்கிருமி புதிதாகப் பரவியதாகத் தகவல் வெளியானதையொட்டி பேராயர் Hwan-kil அவர்கள், திருப்பலிகளை 3 வாரங்களுக்கு இரத்து செய்துள்ளார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவில், கொரோனா தொற்றுக்கிருமி புதிதாகப் பரவி வருவதால், அந்நாட்டு உயர்மறைமாவட்டம் ஒன்று, அடுத்த மூன்று வாரங்களுக்கு அனைத்துத் திருப்பலிகளையும் இரத்து செய்துள்ளது.

இதேமாதிரியான தீர்மானத்தை ஹாங்காங் மறைமாவட்டம் எடுத்த ஒரு வாரத்திற்குப்பின், தென் கொரியாவின் Daegu உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Thaddeus Cho Hwan-kil அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற மார்ச் 5ம் தேதி வரை, மூன்று வாரங்களுக்கு, ஆலயங்களில் நடைபெறும் அனைத்து கூட்டங்கள், திருநீற்றுப் புதன் திருப்பலி போன்றவை உட்பட, அனைத்துத் திருப்பலிகளையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளார். 

Daegu உயர்மறைமாவட்டப் பகுதியில், கிறிஸ்தவக் கூட்டங்கள் நடைபெற்றபின், கொரோனா தொற்றுக்கிருமி புதிதாகப் பரவியதாகத் தகவல் வெளியானதையொட்டி இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளார், பேராயர் Thaddeus Cho Hwan-kil.

தென் கொரியாவில், பிப்ரவரி 19, இப்புதன்கிழமை மட்டுமே, 51 பேர் கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்நாட்டில் 156 பேர், இக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. மேலும், தென் கொரியாவில் இக்கிருமியால், இவ்வாரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2020, 15:28