தேடுதல்

Vatican News
ஆப்ரிக்க மசாய் இன மக்கள் ஆப்ரிக்க மசாய் இன மக்கள் 

நேர்காணல்: தவக்காலத்தை வாழும் முறை

கிறிஸ்தவர்கள் வலியைக் கண்டு, துன்பங்களைக் கண்டு அஞ்சாதவர்களாக இருக்க வேண்டும். செபங்களும், தவங்களும் கிறிஸ்தவத்திற்கு மெருகூட்டுபவை

மேரி தெரேசா – வத்திக்கான்

பிப்ரவரி 26, இப்புதன்கிழமையன்று கிறிஸ்தவர்கள் தவக்காலத்தைத் தொடங்கியிருக்கின்றனர். நாற்பது நாள்கள் கடைப்பிடிக்கப்படும் இந்தக் காலம், மாற்றத்திற்கு, மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. செபம், தவம், பிறரன்பு ஆகிய செயல்களில் அதிகமாக ஈடுபட அழைப்பு விடுக்கும் இக்காலத்தை நாம் எவ்வாறு செலவழிக்க வேண்டுமென்று, வாட்சப் வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளார், அருள்பணி ரொசாரியோ. இவர், ஆப்ரிக்க மறைப்பணி சபையின் பொது ஆலோசகர். இவர், தனது பணியின் காரணமாக, தற்போது ஆப்ரிக்காவின் டான்சானியா நாட்டில் அச்சபையின் மறைப்பணித் தளங்களைச் சந்தித்து வருகிறார்.

நேர்காணல்: தவக்காலத்தை வாழும் முறை–அ.பணி ரொசாரியோ
27 February 2020, 14:56