தேடுதல்

கிரேக்க-மெல்கிதே முதுபெரும்தந்தை Youssef Absi கிரேக்க-மெல்கிதே முதுபெரும்தந்தை Youssef Absi 

மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் வாழ்வதன் நோக்கம்

மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள், தங்கள் வாழ்வில் தூய ஆவியார் ஆக்கமுடன் செயல்படுவதை நம்பி வாழ்கின்றனர் - முதுபெரும்தந்தை Youssef Absi

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மத்திய கிழக்கில் கிறிஸ்தவ பண்பாட்டைப் பரப்புவதற்காக அல்ல, மாறாக, தங்கள் வாழ்வில் தூய ஆவியார் ஆற்றும் செயல்களை வெளிப்படுத்தவும், அதே ஆவியாரின் கொடைகளை மற்றவர் பெறுவதற்கு உதவவுமே, அப்பகுதியில் கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்று, கிரேக்க-மெல்கிதே கத்தோலிக்க வழிபாட்டுமுறை அந்தியோக் முதுபெரும்தந்தை Youssef Absi அவர்கள் கூறினார்.

மத்திய கிழக்குப் பகுதியில் பரவியுள்ள கிறிஸ்தவ சமுதாயங்கள் வாழ்வது பற்றி ஊடகங்களிடம் தெளிவுபடுத்திய முதுபெரும்தந்தை Youssef Absi அவர்கள், மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள், தங்களின் எண்ணிக்கை, வல்லமை, மகிமை மற்றும், திறமைகளைச் சார்ந்து வாழவில்லை, ஆனால், அவர்கள் தங்கள் வாழ்வில் தூய ஆவியார் ஆக்கமுடன் செயல்படுவதை நம்பி வாழ்கின்றனர் என்று கூறினார்.

மத்திய கிழக்குப் பகுதியில் திருஅவைகளின் இப்போதைய மற்றும், வருங்கால மறைப்பணி குறித்து, எகிப்தில் நடைபெற்ற கத்தோலிக்க ஆயர்கள் மன்றத்தில் உரையாற்றிய முதுபெரும்தந்தை Youssef Absi அவர்கள், திருஅவை சமுதாயங்கள் மீது, சமுதாய ஊடகங்கள் பல நேரங்களில் எதிர்மறை செய்திகளையே வழங்குகின்றன என்பதையும் கவலையுடன் சுட்டிக்காட்டினார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2020, 15:43