தேடுதல்

Vatican News
கிரகா மரியா அன்னை வேளாங்கன்னி திருத்தலம் கிரகா மரியா அன்னை வேளாங்கன்னி திருத்தலம்   ((C) by GR DIGITAL 2 User)

நேர்காணல் – இந்தோனேசியாவில் மறைப்பணி

மேதான் மறைமாவட்டத்தில் இந்திய-மொகாலய கலையில், எழுப்பப்பட்டுள்ள கிரகா மரியா அன்னை வேளாங்கன்னி திருத்தலத்தின் முதல் அடுக்கு இஸ்லாம் பாணியிலும், இரண்டாவது அடுக்கு இந்துமத பாணியிலும் உள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான்

இயேசு சபை அருள்பணி ஜேம்ஸ் பாரத புத்ரா அவர்கள், மதுரை இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், மேதான் (Medan) மறைமாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். 2005மாம் ஆண்டில், இந்திய-மொகாலய கலையில், அவர் கட்டியெழுப்பிய, கிரகா மரியா அன்னை வேளாங்கன்னி (Graha Maria Annai Velangkanni) திருத்தலம் உலக அளவில் மத வேறுபாடின்றி சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்தோனேசிய குடிமகனாகிய அருள்பணி ஜேம்ஸ் பாரத புத்ரா அவர்கள் வழங்கிய தொலைபேசி நேர்காணல்..

நேர்காணல் – இந்தோனேசியாவில் மறைப்பணி
16 January 2020, 14:30