தேடுதல்

காரித்தாஸ் அமைப்பின் இலச்சனை காரித்தாஸ் அமைப்பின் இலச்சனை 

மலேசியாவில் புதிய காரித்தாஸ் அலவலகம்

மலேசியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும், பிறரன்பு, மனித முன்னேற்றம், ஒருமைப்பாடு, வளர்ச்சி போன்ற திட்டங்களில், கத்தோலிக்கத் திருஅவையும் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதை வெளிப்படுத்தும் நோக்கத்தில் புதிய காரித்தாஸ் அலுவலகம் திறக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொரு மனிதரிலும் கடவுளின் அன்பு பிரசன்னமாய் இருப்பதை மிகவும் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்தும் நோக்கத்தில், மலேசியா, சிங்கப்பூர் மற்றும், புருனெய் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, மலேசியாவில் தேசிய காரித்தாஸ் அலுவலகத்தைத் திறப்பதற்கு தீர்மானித்துள்ளது.

மலேசிய சமுதாயத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும், பிறரன்பு, மனித முன்னேற்றம், ஒருமைப்பாடு, வளர்ச்சி போன்ற திட்டங்களில், கத்தோலிக்கத் திருஅவையும் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதை வெளிப்படுத்தும் நோக்கத்திலும், இப்புதிய காரித்தாஸ் அலுவலகம் திறப்பதற்கு ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.

இப்புதிய முயற்சி பற்றிய தகவலை வெளியிட்ட பீதேஸ் செய்தி நிறுவனம், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் தலைவர்களோடு தீர கலந்தாலோசித்த பின்னர், மலேசிய தீபகற்பம், மற்றும், மலேசிய புருனெய் பகுதிகளாகிய Sabah, Sarawak ஆகிய மாநிலங்களிலுள்ள அனைத்து மறைமாவட்டங்களுக்குமென, காரித்தாஸ் அலுவலகம் திறக்கப்படவுள்ளது

இப்புதிய மலேசிய காரித்தாஸ் அலுவலகம், கோலாலம்பூரை மையமாகக் கொண்டு செயல்படும் என்றும், இதன் முதல் தலைவராக, Melaka-Johor மறைமாவட்ட ஆயர் Anthony Bernard Paul அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், பீதேஸ் செய்தி கூறுகிறது.  

உலகளாவிய காரித்தாஸ் அமைப்பில், 160க்கும் நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

Sabah, புருனெய் தீவின் வட பகுதியிலுள்ள மலேசிய மாநிலமாகும். Sarawak, புருனெய் தீவின் வடமேற்கிலுள்ள மலேசிய மாநிலமாகும். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2020, 15:45