தேடுதல்

Vatican News
நைஜீரியா பதட்டநிலை நைஜீரியா பதட்டநிலை  (AFP or licensors)

நைஜீரியாவில் குருத்துவக் கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல்

நைஜீரியாவில், கடந்த வாரத்தில், நான்கு குருத்துவ மாணவர்கள், கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நைஜீரியாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, கடந்த வாரத்தில், நான்கு குருத்துவ மாணவர்கள், கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த விவரங்கள், தற்போதுதான், செய்தி நிறுவனங்கள் வழியாக வெளியிடப்பட்டுள்ளன.

நைஜீரியாவின் கடூனா (Kaduna) மாநிலத்திலுள்ள நல்லாயன் உயர் குருத்துவக் கல்லூரிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சிலர், அக்கல்லூரிக்குள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி, 4 பேரை கடத்திச் சென்றுள்ளனர்.

இவர்களின் விடுதலைக்கு பிணையத்தொகை கேட்கப்பட்டிருக்கலாம் என, செய்தி நிறுவனங்கள், தங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

இந்த ஆயுதக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 4 குருத்துவ மாணவர்களையும் விடுவிப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நைஜீரியக் காவல்துறை  அறிவித்துள்ளது

13 January 2020, 15:45