ஆசியா பீபியின் கணவரும் மகளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபோது... (கோப்புப் படம்) ஆசியா பீபியின் கணவரும் மகளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபோது... (கோப்புப் படம்) 

ஆசியா பீபி என்ற பெண்மணியின் சுய வரலாறு

பாகிஸ்தானில், தெய்வ நிந்தனை செய்ததாக, தவறாக குற்றம் சுமத்தப்பட்டு, தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட ஆசியா பீபி என்ற பெண்மணியின் சுய வரலாறு, சனவரி 29, இப்புதனன்று வெளியானது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில், தெய்வ நிந்தனை செய்ததாக, தவறாக குற்றம் சுமத்தப்பட்டு, தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட ஆசியா பீபி என்ற பெண்மணியின் சுய வரலாறு, சனவரி 29, இப்புதனன்று வெளியானது.

பிரெஞ்சு மொழியில், "Enfin Libre!", அதாவது, "இறுதியில் விடுதலைப்பெற்று" என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் இந்நூலை, ஆசியா பீபி அவர்கள், Anne-Isabelle Tollet என்ற எழுத்தாளருடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

2010ம் ஆண்டு, ஒரு குவளை நீருக்காக எழுந்த ஒரு விவாதத்தில், ஆசியா பீபி மீது தெய்வ நிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு, அவர், சிறையில் அடைக்கப்பட்டபின், கடந்த ஒன்பது ஆண்டுகள், சிறையில் அவர் அடைந்த துன்பங்களை இந்நூலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

2019ம் ஆண்டு விடுதலை பெற்ற ஆசியா பீபி அவர்கள், தற்போது, கனடா நாட்டில் முகவரி தெரியாத ஓரிடத்தில் வாழ்ந்து வருகிறார்.

ஆசியா பீபி அவர்களின் விடுதலைக்காக, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் பல்வேறு தருணங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் என்பதும், ஆசியா பீபி அவர்களின் தந்தையும் மகளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கன. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2020, 14:55