தேடுதல்

Vatican News
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் பங்களாதேஷ் குழந்தைகள் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் பங்களாதேஷ் குழந்தைகள் 

நம்மையே சுத்திகரித்து, கிறிஸ்துவுக்காகக் காத்திருப்போம்

கிறிஸ்துவின் பிறப்பிற்காகத் தயாரித்துவரும் இத்திருவருகைக் காலத்தில், ஒப்புரவு அருளடையாளத்தின் வழியே கிறிஸ்துவுக்காகக் காத்திருப்போம் - பங்களாதேஷ் ஆயர், கெர்வாஸ் ரொசாரியோ

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்துவின் பிறப்பிற்காகத் தயாரித்துவரும் இத்திருவருகைக் காலத்தில், ஒப்புரவு அருளடையாளத்தின் வழியே கிறிஸ்துவுக்காகக் காத்திருப்போம் என்று, தன் மறைமாவட்ட கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், பங்களாதேஷ் ஆயர், கெர்வாஸ் ரொசாரியோ (Gervas Rosario).

Rajshahi மறைமாவட்டத்தின் ஆயரும், பங்களாதேஷ் ஆயர் பேரவையின் துணைத் தலைவருமான ஆயர் ரொசாரியோ அவர்கள், இயேசு நம்மிடம் வரும்போது, நம் பாவ வாழ்விலிருந்து நாம் விடுதலை பெற்று, நம் ஆன்மாவை தயாரிக்கவேண்டும் என்று அழைப்பு விடுப்பார் என்று தன் மறைமாவட்ட மக்களுக்கு வெளியிட்டுள்ள திருவருகைக்காலச் சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

நம்மை நாம் சுத்திகரிக்க வேண்டுமெனில், அது செபத்தின் வழியாகவும், நம் வாழ்க்கை முறைகளை மாற்றுவதன் வழியாகவுமே இயலும் என்று தன் சுற்றறிக்கையில் கூறியுள்ளார், Rajshahi மறைமாவட்டத்தின் ஆயர்.

இயேசு நம் வாழ்வுக்குள்ளும், குடும்பத்திலும், சமுதாயத்திலும் எளிதில் நுழைவதற்கு உதவும் நோக்கத்தில், நம் வாழ்வு தயாரிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ள ஆயர் ரொசாரியோ அவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் பண்பாட்டுக்கு இயைந்தவகையில், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி, தங்கள் அயலவருடன் ஒன்றிணைந்து கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுவதே, மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று மேலும் விண்ணப்பித்துள்ளார். (AsiaNews)

07 December 2019, 15:56