தேடுதல்

பாரம்பரிய உடைகளுடன் கச்சின் இன கத்தோலிக்கர் பாரம்பரிய உடைகளுடன் கச்சின் இன கத்தோலிக்கர் 

நேர்காணல் – கச்சின் இன மக்கள் மத்தியில் மறைப்பணி-பகுதி-2

கச்சின் மாநிலத்தில், மூன்றில் இரண்டு பகுதியினர் கிறிஸ்தவர்கள். இப்பகுதியில், 1966ம் ஆண்டில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை நாற்பது விழுக்காடு ஆகும். 2010ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை, 90 முதல் 95 விழுக்காடாக உயர்ந்துள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான்

இந்தியாவின், குஜராத் இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்த அருள்பணி கிரிஷ் சந்தியாகு சே.ச. அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக, மியான்மார் நாட்டின் வட பகுதியிலுள்ள கச்சின் மாநிலத் தலைநகரமான மிச்சினாவில் மறைப்பணியாற்றி வருகிறார். மேலும், இவர், மியான்மார் இயேசு சபை மறைப்பணித்தளத்தில் சமுதாய-மேய்ப்புப் பணி குழுவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். உலகெங்கும், சமுதாய-மேய்ப்புப் பணியாற்றும் இயேசு சபையினருக்கு, உரோம் நகரிலுள்ள அச்சபையின் உலகளாவிய தலைமையகம், அண்மையில், ஐந்து நாள்கள் பன்னாட்டு கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் கலந்துகொள்ள வந்திருந்த அருள்பணி கிரிஷ் சந்தியாகு சே.ச. அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு வருகை தந்து, மியான்மார் நாடு பற்றியும், அவர் மறைப்பணியாற்றும் கச்சின் இன மக்கள் பற்றியும் பகிர்ந்துகொண்டதை, கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் வழங்கினோம். அதன் தொடர்ச்சியை, அதாவது அருள்பணி கிரிஷ் சந்தியாகு சே.ச. அவர்கள், பங்கெடுத்த அந்த பன்னாட்டு கூட்டம் பற்றியும், அதில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், இன்னும், கச்சின் மாநிலத்தில் ஆற்றிவரும் சூழலியல் பணிகள் பற்றியும் பகிர்ந்துகொண்டதை இன்று வழங்குகிறோம்.

கச்சின் இன மக்களிடையே மறைப்பணி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2019, 10:52