தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ், அ.பணி கிரிஷ் சந்தியாகு சே.ச. திருத்தந்தை பிரான்சிஸ், அ.பணி கிரிஷ் சந்தியாகு சே.ச. 

நேர்காணல்: கச்சின் இன மக்கள் மத்தியில் மறைப்பணி-பகுதி-1

குஜராத் இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்த அருள்பணி கிரிஷ் சந்தியாகு சே.ச. அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக, மியான்மார் நாட்டின் வடக்கிலுள்ள கச்சின் மாநிலத் தலைநகரமான மிச்சினாவில் மறைப்பணியாற்றி வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

அருள்பணி கிரிஷ் சந்தியாகு சே.ச. அவர்கள், இந்தியாவின் குஜராத் இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாக, மியான்மார் நாட்டின் வடக்கிலுள்ள கச்சின் மாநிலத் தலைநகரமான மிச்சினாவில் மறைப்பணியாற்றி வருகிறார். அந்நகரிலுள்ள புனித லூக்கா கல்லூரியில், இணை இயக்குனராகப் பணியாற்றிவரும் அருள்பணி கிரிஷ் சந்தியாகு சே.ச. அவர்கள், மியான்மார் இயேசு சபை மறைப்பணித்தளத்தில் சமுதாய-மேய்ப்புப் பணி குழுவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். உலகெங்கும், சமுதாய-மேய்ப்புப் பணியாற்றும் இயேசு சபையினருக்கு, உரோம் நகரில் இயேசு சபை தலைமையகத்திலுள்ள அப்பணியின் மைய அலுவலகம் அண்மையில், ஐந்து நாள்கள் பன்னாட்டு கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் கலந்துகொள்ள வந்திருந்த அருள்பணி கிரிஷ் சந்தியாகு சே.ச. அவர்களை வத்திக்கான் வானொலியில் சந்தித்து, அவர் கச்சின் இன மக்கள் மத்தியில் ஆற்றிவரும் பணிகள் பற்றிக் கேட்டோம்

நேர்காணல்: கச்சின் இன மக்கள் மத்தியில் மறைப்பணி-பகுதி-1
04 December 2019, 12:41