Gaza பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுதல் Gaza பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுதல் 

காசா கிறிஸ்தவர்கள் பெத்லகேம், எருசலேம் செல்லத் தடை

Gaza Strip கிறிஸ்தவர்கள், இஸ்ரேல் மற்றும், West Bankயைத் தவிர, வேறு நாடுகளுக்கு, ஜோர்டன் வழியாகச் செல்லலாம் - இஸ்ரேல் அரசு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித பூமியின் Gaza Strip பகுதியில் வாழும் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள், கிறிஸ்மஸ் காலத்தில், பெத்லகேம், நாசரேத், எருசலேம் ஆகிய நகரங்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமாறு, திருஅவைத் தலைவர்கள், இஸ்ரேல் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Gaza Strip பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், இஸ்ரேல் மற்றும், West Bankயைத் தவிர வேறு நாடுகளுக்கு, ஜோர்டன் வழியாகச் செல்லலாம் என, டிசம்பர் 12, இவ்வியாழனன்று பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, அறிக்கை வெளியிட்டுள்ளது இஸ்ரேல் அரசு.

இஸ்ரேல் அரசின் இக்கொள்கையை விமர்சித்துள்ள, புனித பூமி திருஅவை அதிகாரிகளின் ஆலோசகர் வாதி அபு நாசர் அவர்கள், உலகின் மற்ற பகுதிகளிலுள்ள மக்கள் பெத்லகேமுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளவேளை, காசா கிறிஸ்தவர்களுக்கும் அதே உரிமை வழங்கப்பட வேண்டும் என, ராய்ட்டர் செய்தியிடம் கூறியுள்ளார்.

அண்மை ஆண்டுகளாக, கிறிஸ்மஸ் மற்றும், இயேசுவின் உயிர்ப்புக் காலங்களில் உலகெங்கிலுமிருந்து, பெத்லகேம், மற்றும் எருசலேம் நகரங்களில் புனித இடங்களைத் தரிசிப்பதற்காகச் செல்லும் திருப்பயணிகள் மற்றும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆனால், கிறிஸ்து பிறந்து இறந்து உயிர்த்த புனித இடங்களைப் பார்ப்பதற்கு, காசா கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இவ்வாண்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காசாவில் தற்போது ஏறத்தாழ ஆயிரம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள். 2012ம் ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 4,500 ஆக இருந்தது. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2019, 15:29