தேடுதல்

சென்னை மெரினா கடல் அலையில் விளையாடும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் சென்னை மெரினா கடல் அலையில் விளையாடும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் 

"குழந்தைகளின் மிகச்சிறந்த நன்மைக்குப் பணியாற்ற"

இந்திய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், "குழந்தைகளின் மிகச்சிறந்த நன்மைக்குப் பணியாற்ற" என்ற மையக்கருத்துடன், திருவருகைக்காலச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்திய ஆயர் பேரவையின் தலைவரும், மும்பை பேராயருமான கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், "குழந்தைகளின் மிகச்சிறந்த நன்மைக்குப் பணியாற்ற" என்ற மையக்கருத்துடன், திருவருகைக்காலச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

மும்பை உயர்மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளையும் இச்செய்தி அடையவேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இளையோர், தங்கள் தனிப்பட்ட செலவுகளுக்கு வழங்கப்படும் பணத்திலிருந்து, ஒரு பகுதியை, குழந்தைகள் நலனுக்கென செலவிடுமாறு, அழைப்பு விடுத்துள்ளார்.

பசியாலும் நோய்களாலும் துன்புறும் குழந்தைகளுக்கு உதவும்வண்ணம் மேற்கொள்ளப்பட்டுள்ள திருவருகைக்கால முயற்சிகள், குறிப்பாக, கிராமங்களிலும், சேரிகளிலும் வாழும் குழந்தைகளை அடையவேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை உயர்மறைமாவட்டத்தின் சமூகப்பணி மையம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்த மையத்தினால் பயன்பெறும் 1,400க்கும் அதிகமான குழந்தைகளை இத்திருவருகைக் காலத்தில் சிறப்பாக நினைவுகூரும்படி விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2019, 14:46