ஈராக்கின் நினிவே பகுதி கிறிஸ்தவ கோவில் ஈராக்கின் நினிவே பகுதி கிறிஸ்தவ கோவில் 

ஈராக்கின் Al-Tahira கோவிலை மீண்டும் புதுப்பிக்கும் பணி

ISIS தீவிரவாதக் குழுவால் ஈராக்கில் சேதமாக்கப்பட்ட பெரும் Al-Tahira கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப, Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பு முன்வந்துள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் ISIS தீவிரவாதக் குழுவால் ஈராக்கில் சேதமாக்கப்பட்ட ஒரு கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப, Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பு முன்வந்திருப்பதாக, ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஈராக்கின் Baghdeda என்ற நகரில் அமைந்துள்ள பெரும் Al-Tahira என்ற பழம்பெரும் கோவிலை மீண்டும் புதுப்பிக்கும் பணியை துவங்கவிருப்பதாக, இந்த பிறரன்பு அமைப்பு நவம்பர் 5, இச்செவ்வாயன்று அறிவித்தது.

1932ம் ஆண்டு, Baghdeda ஊர் மக்கள் ஒன்றிணைந்து எழுப்பிய பெரும் Al-Tahira ஆலயம், ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது என்று கூறிய, மோசூல், சிரிய கத்தோலிக்கப் பேராயர், Petros Mouche அவர்கள், இப்பணியை மேற்கொண்டுள்ள Aid to the Church in Need அமைப்பிறகு நன்றி கூறினார்.

2014ம் ஆண்டு ISIS குழு நினிவே பள்ளத்தாக்கினை ஆக்கிரமித்த வேளையில், அங்கிருந்து வெளியேறிய 1,20,000த்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களில், தற்போது, 45,000 பேர் திரும்பி வந்திருப்பதாக ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2019, 15:07