தேடுதல்

ஸ்காட்லாந்து ஆயர்களுடன் உரையாடும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் ஸ்காட்லாந்து ஆயர்களுடன் உரையாடும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

பிரித்தானிய தேர்தலையொட்டி, ஸ்காட்லாந்து ஆயர்களின் மடல்

மத நம்பிக்கை குறித்த சகிப்புத்தன்மை குறைந்துவரும் இக்காலத்தில், கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு நெருக்கமான கொள்கைகளை கொண்டுள்ள வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கவேண்டும் - ஸ்காட்லாந்து ஆயர்களின் விண்ணப்பம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத நம்பிக்கை குறித்த சகிப்புத்தன்மை குறைந்துவரும் இக்காலத்தில், கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு நெருக்கமான கொள்கைகளை கொண்டுள்ள வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்துடன், ஸ்காட்லாந்து ஆயர்கள், மடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் டிசம்பர் 12ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டி, இம்மடலை வெளியிட்டுள்ள ஸ்காட்லாந்து ஆயர்கள், கத்தோலிக்க மக்கள் வாக்களிக்க தவறக்கூடாது என்றும், தகுந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

கருவிலிருந்து கல்லறை வரை மனித வாழ்வு மதிக்கப்படுத்தல், திருமணம் மற்றும் குடும்ப வாழ்வைப் போற்றுதல், வறுமையை நீக்குதல், மதச் சுதந்திரம் மற்றும் மனசாட்சியின் சுதந்திரம் காக்கப்படுதல், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் தடுத்தல் என்ற ஐந்து கருத்துக்களை வலியுறுத்தி ஆயர்களின் மடல் வெளியாகியுள்ளது.

கட்சி மனப்பான்மையை விடுத்து, உண்மையையும், நன்மையையும் போற்றிக்காக்கும் தலைவர்களை மக்கள் தெரிவு செய்யவேண்டும் என்று ஸ்காட்லாந்து ஆயர்கள் இம்மடலில் வலியுறுத்தியுள்ளனர்.

நவம்பர் 23, 24, வருகிற சனி, மற்றும் ஞாயிறு ஆகிய இருநாள்கள், ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட கத்தோலிக்க ஆலயங்களில், ஆயர்களின் மடல் வாசிக்கப்படும் என்று, ஸ்காட்லாந்து ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2019, 14:43