தேடுதல்

Vatican News
திருத்தந்தைக்கு பொன்னாடை போர்த்தும்  ஆயர் செ.சூசைமாணிக்கம் அவர்கள் திருத்தந்தைக்கு பொன்னாடை போர்த்தும் ஆயர் செ.சூசைமாணிக்கம் அவர்கள் 

நேர்காணல் – இறை ஊழியர் தந்தை லெவேயின் புண்ணியப் பண்புகள்

பிரான்ஸ் நாட்டில் பிறந்த இறைஇரக்கத்தின் தூதுவர், இறை ஊழியர் தந்தை லூயி லெவே சே.ச. அவர்கள், தனது 24வது வயதில் மறைப்பணியாற்ற தமிழகம் வந்தார். சிவகங்கை மறைமாவட்டத்தில் மறைப்பணியாற்றி, சருகணியில் 1973ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்தார்

மேரி தெரேசா - வத்திக்கான்

இறை ஊழியர் தந்தை லூயி லெவே சே.ச. அவர்கள், பிரான்ஸ் நாட்டில் 1884ம் ஆண்டில் பிறந்தவர். இயேசு சபையில் சேர்ந்த இவர், மறவ நாட்டில் மறைப்பணியாற்றிய, இயேசு சபை புனிதர் அருளானந்தரின் (ஜான் தெ பிரிட்டோ) வழியைப் பின்பற்றி, சிவகங்கை மறைமாவட்டத்தில் மட்டுமே மறைப்பணியாற்றியவர். தந்தை லெவே அவர்கள், ஆண்டாவூரணியில் 23 ஆண்டுகளும், இராமநாதபுரத்தில் 13 ஆண்டுகளும் பங்குத் தந்தையாக அரும்பணியாற்றினார். அதன்பிறகு, 1956ம் ஆண்டு முதல், 1973ம் ஆண்டு வரை, தன் வாழ்நாள் முழுவதும் சருகணியில் ஆன்ம குருவாகப் பணியாற்றி இறைவனடி சேர்ந்தார். இந்தியாவிற்கு மறைப்பணியாற்ற வந்ததற்குப்பின், பிரான்ஸ் நாட்டிற்கு அவர் செல்லவே இல்லை. இறை ஊழியர் தந்தை லெவே அவர்கள், அருளாளராக, புனிதராக உயர்த்தப்படுவதற்கென, சிவகங்கை மறைமாவட்டம் முதல்கட்ட பணிகளை முடித்து, அவற்றை, திருப்பீடத்தின் புனிதர் பேராயத்திற்கும் அனுப்பியுள்ளது. இறை ஊழியர் தந்தை லெவே அவர்கள் பற்றி சிவகங்கை மறைமாவட்ட, மேதகு ஆயர் செ.சூசைமாணிக்கம் அவர்கள், வத்திக்கான் வானொலியில் பகிர்ந்துகொண்டதன் தொடர்ச்சியை இன்று வழங்குகிறோம் 

இறை ஊழியர் தந்தை லெவேயின் புண்ணியப் பண்புகள்
28 November 2019, 15:04