தேடுதல்

திருத்தந்தையுடன் சான் எஜீதியோ பிறரன்பு அமைப்பின் நிறுவனர், ஆந்திரேயா ரிக்கார்தி திருத்தந்தையுடன் சான் எஜீதியோ பிறரன்பு அமைப்பின் நிறுவனர், ஆந்திரேயா ரிக்கார்தி 

‘சான் எஜீதியோ’வின் நிறுவனருக்கு ஐரோப்பிய யூத மத விருது

கத்தோலிக்க, யூத சமுதாயங்களிடையே உரையாடலை ஊக்குவிக்க ரிக்கார்தி அவர்கள் ஆற்றிய பணிகளுக்கென 'Rabbi Moshe Rosen' விருது வழங்கப்படுகிறது - ஐரோப்பிய யூத மத தலைவர்கள் அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மதங்களிடையே நல்லுறவை வளப்பதற்கு உதவியதற்காக, கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பான சான் எஜீதியோ (San Egidio) குழுவின் நிறுவனருக்கு ஐரோப்பிய யூத மத விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூத மதத் தலைவர்களால் உருவாக்கப்பட்டுள்ள 'Rabbi Moshe Rosen' விருது, அக்டோபர் 24, இவ்வியாழனன்று சான் எஜீதியோ பிறரன்பு அமைப்பின் நிறுவனர், ஆந்திரேயா ரிக்கார்தி (Andrea Riccardi) அவர்களுக்கு, உரோம் நகரில் வழங்கப்படவுள்ளது.

பல்வேறு கலாச்சாரங்களை, மதங்களைச் சேர்ந்த மக்களிடையே இணக்கவாழ்வை உருவாக்கவும், குறிப்பாக, கத்தோலிக்க, யூத சமுதாயங்களிடையே உரையாடலை ஊக்குவிக்கவும் ரிக்கார்தி அவர்கள், ஆற்றிய பணிகளுக்கென இவ்விருது வழங்கப்படுகிறது என்று, ஐரோப்பிய யூத மத தலைவர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

கம்யூனிச அடக்குமுறை காலத்தில், ருமேனியாவில் யூத சமுதாயத்தைக் காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட யூத மதக்குரு Moshe Rosen அவர்களின் பெயரால், ஐரோப்பிய யூத சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட இவ்விருது, ஐரோப்பிய யூத சமுதாயத்திற்கு சிறப்பானப் பணியாற்றியவர்களுக்கும், யூத விரோதப் போக்குகளைத் தடுத்தவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2019, 16:08