தேடுதல்

புனித அன்னை தெரேசாவுடன் புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் புனித அன்னை தெரேசாவுடன் புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் 

போலந்து நாட்டு ஆயர் பேரவை விண்ணப்பம்

புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களை, திருஅவையின் மறைவல்லுனர் என்றும், ஐரோப்பாவின் பாதுகாவலர்களில் ஒருவராகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவிக்கவேண்டும் என்ற விண்ணப்பம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களை, திருஅவையின் மறைவல்லுனர் என்றும், ஐரோப்பாவின் பாதுகாவலர்களில் ஒருவராகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவிக்கவேண்டும் என்று,  போலந்து நாட்டு ஆயர் பேரவை விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அக்டோபர் 22, இச்செவ்வாயன்று, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் திருவிழா சிறப்பிக்கப்பட்ட வேளையில், இந்த விண்ணப்பத்தை போலந்து ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Stanisław Gądecki அவர்கள் திருத்தந்தைக்கு அனுப்பியுள்ளார்.

ஜான்பால் அவர்கள், 1920ம் ஆண்டு பிறந்ததன் முதல் நூற்றாண்டும், அவர் மரணமடைந்ததன் 15ம் ஆண்டும், 2020ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, போலந்து ஆயர்கள், இந்த விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளனர் என்று, போலந்து ஆயர் பேரவையின் அறிக்கையொன்று கூறுகிறது.

திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் தலைமைப் பணியில், அவருக்கு பல வழிகளில் உறுதுணையாக வத்திக்கானிலும், திருத்தந்தையின் மறைவுக்குப்பின், போலந்து நாட்டின் கிரக்கோவ் பேராயராகவும் பணியாற்றிய கர்தினால் Stanisław Dziwisz அவர்கள், வார்சா நகரில், அக்டோபர் 22ம் தேதி நடைபெற்ற "Europa Christi" என்ற இயக்கத்தின் மாநாட்டில் பேசுகையில், திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், திருஅவையின் மறைவல்லுனராக உயர்த்தப்படுவது மிகவும் பொருத்தமானது என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2019, 15:45