தேடுதல்

சேதப்படுத்தப்பட்ட புனித ஜான் பெர்க்மான்ஸ் பள்ளி சேதப்படுத்தப்பட்ட புனித ஜான் பெர்க்மான்ஸ் பள்ளி  

ஜார்கண்டில் இயேசு சபையினர் பள்ளி தாக்கப்பட்டுள்ளது

ஜார்கண்டில் இயேசு சபையினரின் புனித ஜான் பெர்க்மான்ஸ் பள்ளி இந்து தேசியவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது. இது நடந்து எட்டு நாள்கள் ஆகியும் யாரும் கைதுசெய்யப்படவில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் இயேசு சபையினர் நடத்தும் ஒரு கத்தோலிக்கப் பள்ளியை 500 பேர் கொண்ட கும்பல், கடந்த வாரத்தில் தாக்கியதில், அந்தப் பள்ளி மீண்டும் திறக்க முடியாத அளவில் சேதமாக்கப்பட்டுள்ளது என்று ஆசியச் செய்தி கூறுகின்றது.

இந்து தேசியவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் இக்கும்பல், செப்டம்பர் 3ம் தேதி, Mundli யிலுள்ள புனித ஜான் பெர்க்மான்ஸ் பள்ளியைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

தும்கா-ராய்கஜ் இயேசு சபை மாநிலத்தின் இயேசு சபையினர் நடத்தும் இப்பள்ளி பற்றி தாக்கப்பட்டது குறித்து, ஆசியச் செய்தியிடம் பேசிய, அப்பள்ளியின் செயலர் அருள்பணி தாமஸ் குழிவேலி அவர்கள், எல்லாமே அழிக்கப்பட்டுள்ளன மற்றும், இப்பள்ளியை எங்களால் மீண்டும் நடத்த முடியாது என்று தெரிவித்தார்.

இத்தாக்குதலையடுத்து, குற்றவாளிகள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும், இப்பள்ளி நிர்வாகம், ஜார்க்கண்ட் ஆளுனர், முதலமைச்சர், தேசிய மனித உரிமைகள் அவை, மற்றும், தேசிய சிறுபான்மையினர் அவையிடம் புகார் அளித்துள்ளது என்றும், ஆசியச் செய்தி கூறுகிறது.  

அப்பள்ளிக்கு அருகிலிருக்கும் மாணவர் விடுதியிலுள்ள சில பழங்குடி சிறுவர்களுக்கும், சில மாணவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சண்டையே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும், அருள்பணி தாமஸ் குழிவேலி அவர்கள் கூறினார்.(AsiaNews / Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2019, 15:39