தேடுதல்

Vatican News
தர்மபுரி மறைமாவட்ட ஆயர் இலாரன்ஸ் பயஸ் துரை ராஜ் தர்மபுரி மறைமாவட்ட ஆயர் இலாரன்ஸ் பயஸ் துரை ராஜ் 

நேர்காணல் – இந்திய ஆயர்களின் அத் லிமினா சந்திப்பு

தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும், புதுச்சேரி யூனியன் பகுதியில் இறையாட்சிப் பணியாற்றும், இலத்தீன் வழிபாட்டுமுறையின் 54 ஆயர்கள், திருத்தந்தையை சந்தித்தனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

ஆயர்கள் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையை சந்தித்து, தங்கள் மறைமாவட்டங்களின் நிலவரம் பற்றி அறிவிக்கும் அத் லிமினா நிகழ்வையொட்டி, செப்டம்பர் 13, 17, 26 ஆகிய தேதிகளில் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் மூன்று குழுக்களாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். முதல் இரு குழுக்கள் ஏற்கனவே இச்சந்திப்பை நிறைவு செய்துள்ளனர். செப்டம்பர் 17, இச்செவ்வாயன்று இந்தியாவின் 54 ஆயர்கள், திருத்தந்தையைச் சந்தித்து, ஒன்றரை மணி நேரத்திற்குமேல் கலந்துரையாடினர். இவர்கள், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும், புதுச்சேரி யூனியன் பகுதியில், இறையாட்சிப் பணியாற்றுகின்றவர்கள். இந்த இரண்டாவது குழுவில் இடம்பெற்றிருந்த தமிழகத்தின் 17 ஆயர்களில் ஒருவரான, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு இலாரன்ஸ் பயஸ் துரை ராஜ் அவர்களை வத்திக்கான் வானொலியில் சந்தித்து, அத் லிமினா சந்திப்பு பற்றிக் கேட்டோம்

நேர்காணல் – இந்திய ஆயர்களின் அத் லிமினா சந்திப்பு – ஆயர் இலாரன்ஸ் பயஸ்
19 September 2019, 15:03