தேடுதல்

அமீரகத்தில் 17 கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள், ஓர் இந்து கோவிலுக்கு  அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அமீரகத்தில் 17 கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள், ஓர் இந்து கோவிலுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம்  

17 கிறிஸ்தவ ஆலயங்கள், ஓர் இந்து கோவிலுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில், 1965ம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்ட புனித யோசேப் கத்தோலிக்க பேராலயம், அந்நாட்டிலுள்ள பழங்கால ஆலயங்களில் ஒன்றாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் வானொலி

ஐக்கிய அரபு அமீரகத்தில், சகிப்புத்தன்மை மற்றும், இஸ்லாம் அல்லாத பிற மதங்களுக்குத் திறந்தமனம் ஆகியவற்றின் முக்கிய அடையாளமாக, பல ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் உட்பட, 17 கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் மற்றும், ஓர் இந்து கோவிலுக்கு, அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமீரகத்தில் ஏனைய மதங்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதியளித்த நிகழ்வு, கடந்த சனிக்கிழமையன்று அபு தாபியில் நடைபெற்றது.

அபு தாபியில், அனைத்து மத நிறுவனங்களையும் ஒரே துறையின்கீழ் கொண்டுவருவதன் வழியாக, அவற்றுக்கு ஆதரவளிப்பதற்கு அதிகாரிகளுக்கு எளிதாக இருக்கும் என்ற நோக்கத்தில், அபு தாபியின் சமுதாய வளர்ச்சித்துறை, நல்லிணக்கத்திற்கு ஓர் அழைப்பு என்ற கொள்கையில், இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

அமீரகத்தை அனைவருக்கும் உரிய இடமாக அமைக்கும் நோக்கத்தில், அந்நாட்டின் பெருந்தலைவர்கள், பல ஆண்டுகளாக, பல்வேறு மதங்களின் மக்களை நாட்டிற்குள் அனுமதித்தனர், தற்போது அபு தாபி, சகிப்புத்தன்மை மற்றும், நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வதில் முன்னோடியாக உள்ளது என்று, அத்துறையின் தலைவர் முகீர் அல் கைலி அவர்கள் தெரிவித்தார்.

2019ம் ஆண்டு பிப்ரவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அபு தாபிக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். அச்சமயத்தில் அவர், மனித உடன்பிறந்தநிலை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தில், அல் அசார் பல்கலைக்கழக பெரிய குருவுடன் சேர்ந்து கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2019, 15:07