போதைப்பொருள் தடுப்பு என்ற பெயரில் நிகழும் கொலைகளைத் நிறுத்தக் கோரும் மனித உரிமை ஆர்வலர்கள் போதைப்பொருள் தடுப்பு என்ற பெயரில் நிகழும் கொலைகளைத் நிறுத்தக் கோரும் மனித உரிமை ஆர்வலர்கள் 

பிலிப்பீன்ஸ் அருள் பணியாளர்களுக்கு ஆதரவாக திருப்பலிகள்

கத்தோலிக்க ஆயர்களும், அருள் பணியாளர்களும், மக்களை, கலவரத்திற்கு தூண்டிவிடுகின்றனர் என்று, பிலிப்பீன்ஸ் அரசு கூறிவரும் குற்றச்சாட்டை எதிர்த்து, ஆலயங்களில் சிறப்புத் திருப்பலிகள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்க ஆயர்களும், அருள் பணியாளர்களும், மக்களை, கலவரத்திற்கு தூண்டிவிடுகின்றனர் என்று, பிலிப்பீன்ஸ் அரசு கூறிவரும் குற்றச்சாட்டை எதிர்த்தும், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், அந்நாட்டின் பல ஆலயங்களில், ஆகஸ்ட் 15, அன்னை மரியாவின் திருநாளன்று, சிறப்புத் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன என்று, UCA செய்தி கூறுகிறது.

Kalookan மறைமாவட்டத்தின் ஆயர் பாப்லோ விர்ஜீலியோ டேவிட் (Pablo Virgilio David) அவர்கள், வறியோர் சார்பாக, குறிப்பாக, போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரால் வறியோர் வேட்டையாடப்படுவதை குறித்து பேசியதால், பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொத்ரீகோ துத்தெர்த்தே அவர்களால் கண்டனம் செய்யப்பட்டார்.

ஆயர் டேவிட் மற்றும் பல்வேறு அருள் பணியாளர்கள் அரசுத் தலைவரைக் கொல்வதற்கு மக்களுடன் இணைந்து திட்டமிடுகின்றனர் என்று, அரசு வெளியிட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து, குற்றம் சுமத்தப்பட்ட பணியாளருக்காக, ஆகஸ்ட் 6, இயேசுவின் தோற்றமாற்றத் திருநாளன்றும், ஆகஸ்ட் 15, மரியாவின் விண்ணேற்புத் திருநாளன்றும், பிலிப்பீன்ஸ் ஆலயங்களில், சிறப்புத் திருப்பலி நிறைவேற்ற, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Romulo Valles அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்.

நான்கு கத்தோலிக்க ஆயர்கள், மூன்று அருள் பணியாளர்கள், ஒரு அருள் சகோதரர், மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த 35 பேர் ஆகியோர் மீது, பிலிப்பீன்ஸ் காவல் துறை, குற்றச் சாட்டுக்களை பதிவுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2019, 14:15