கர்தினால் Joseph Coutts கர்தினால் Joseph Coutts 

கிறிஸ்தவர்களுக்கு சம உரிமை கோரும் பாகிஸ்தான் கர்தினால்

பாகிஸ்தானிலேயே பிறந்து வளர்ந்த சிறுபான்மையினர் எவரும், ஒருபொழுதும் இரண்டாம் தரமான குடிமக்களாக நடத்தப்படக் கூடாது - கர்தினால் ஜோசப் கூட்ஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில், சிறுபான்மையினருக்கும், முழுமையான, சமமான உரிமைகள் வழங்கப்படும் என்று, பாகிஸ்தான் தலைவர், முகமத் அலி ஜின்னா அவர்கள், 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 11ம் தேதி, உறுதி வழங்கியது, கடைபிடிக்கப்படவேண்டும் என்று, அந்நாட்டு கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்கள், அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் ஆகஸ்ட் 11, இஞ்ஞாயிறன்று சிறுபான்மையினர் நாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், பீதேஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய ஒரு பேட்டியில், கராச்சி பேராயர் கர்தினால் கூட்ஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

பாகிஸ்தானிலேயே பிறந்து வளர்ந்த சிறுபான்மையினர் எவரும், ஒருபொழுதும் இரண்டாம் தரமான குடிமக்களாக நடத்தப்படக் கூடாதென்று, கர்தினால் கூட்ஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

பாகிஸ்தானின் வளர்ச்சிக்காக, அந்நாட்டு கத்தோலிக்கச் சமுதாயம், அன்றும், இன்றும், என்றும் தன் உயர்ந்த பங்கை ஆற்றிவருகிறது என்பதை, தன் பேட்டியில் வலியுறுத்திய கர்தினால் கூட்ஸ் அவர்கள், நீர் சேமிப்பு, நீர் அணைகள் கட்டுதல் ஆகிய அரசின் முயற்சிகளுக்கு கத்தோலிக்கரிடமிருந்து நிதி உதவிகள் திரட்டப்பட்டு, அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானில் சமய சிறுபான்மையினராக கிறிஸ்தவர்கள் நடத்தப்படாமல், சம உரிமைகள் கொண்ட குடிமக்களாக நடத்தப்படவேண்டும் என்றும் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2019, 15:10