தேடுதல்

Vatican News
கர்தினால் Beshara Raï கர்தினால் Beshara Raï  (BKE-mich )

லெபனான்- கர்தினால் ராய், அரசுத்தலைவர் Aoun சந்திப்பு

திறமையின் அடிப்படையிலும், அனுபவத்தின் அடிப்படையிலும், நாட்டின் பல்வேறு துறைகளில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் - லெபனான் கர்தினால்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிகள் குறித்து, அரசுத்தலைவருடன் கலந்துரையாடிதாக அறிவித்துள்ளார், அந்நாட்டின் கர்தினால் Beshara Raï.

ஆகஸ்ட் 21, இப்புதனன்று அரசுத்தலைவரின் கோடை இல்லத்தில், அரசுத்தலைவர் Michel Aoun அவர்களை சந்தித்து உரையாடியபின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கர்தினால் ராய் அவர்கள், லெபனானையும் மத்திய கிழக்கு நாடுகளையும் பாதித்திருக்கும் பொருளாதார, சமுதாய, மற்றும், பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்து அரசுத்தலைவருடன் கலந்துரையாடியதாகவும், பொருளாதாரப் பிரச்சனைகள் மக்களை நேரடியாகத் தாக்கும் ஒன்று என்பதால்,   பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் வருங்காலத் திட்டங்களின் தேவை குறித்து விவாதித்ததாகவும் கூறினார்.

மத, மற்றும், கலாச்சார பன்மைத்தன்மையை மதிப்பதுடன்,  நாட்டில் நிலவிவரும் அரசியல் மற்றும் அமைப்புமுறை நெருக்கடிகளுக்கும்  தீர்வு கண்டு, உறுதியான ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என, அரசுத்தலைவரிடம் அழைப்பு விடுத்ததாகக் கூறினார், கர்தினால் ராய்.

மக்கள் பணி, நீதித்துறை, இராணுவம், பாதுகாப்புத்துறை என பல்வேறு துறைகளில் மத ரீதியான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என கூறும் லெபனான் அரசியலமைப்பு, பிரிவு எண் 95 நீக்கப்பட்டவேண்டும் என அழைப்பு விடுத்த கர்தினால் ராய் அவர்கள், திறமை மற்றும், அனுபவத்தின் அடிப்படையில் நியமனங்கள் இடம்பெறவேண்டும் என்ற  விண்ணப்பத்தையும் முன்வைத்தார். (AsiaNews)

22 August 2019, 15:14