தேடுதல்

இந்தோனேசியாவின் பாப்புவாவில் போராட்டம் இந்தோனேசியாவின் பாப்புவாவில் போராட்டம் 

இந்தோனேசிய ஆயர் - இனவெறிக்கு எதிராக கண்டனம்

இனப்பாகுபாட்டிற்கு எதிராக, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், வன்முறையைக் கைவிட்டு, அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்குமாறு வலியுறுத்தல் - இந்தோனேசிய ஆயர் Petrus

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவின் பாப்புவா மற்றும், மேற்கு பாப்புவா மாநிலங்களில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ள, அந்நாட்டு ஆயர் ஒருவர், அனைத்து மக்களும் உயரிய மாண்பைக் கொண்டுள்ளனர், அதனால் அது மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுமாறு விண்ணப்பித்துள்ளார். 

மேற்கு பாப்புவா மாநிலத்தில் இடம்பெறும் இவ்வன்முறை குறித்து, யூக்கா செய்திகளிடம் பேசிய, அம்மாநிலத்தின் Amboina மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Petrus Canisius Mandagi MSC அவர்கள், இனவெறி என்பது, மனிதப்பண்பற்ற மற்றும், அறநெறிக்கு முரணான ஒரு செயல் என்று கூறினார்.

இனப்பாகுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகின்றது என்றுரைத்துள்ள ஆயர் Petrus அவர்கள், வன்முறையைக் கைவிட்டு, அமைதியான முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தோனேசியாவின் அம்மாநிலங்களில் இராணுவத்தின் இருப்பு ஏற்கனவே பலமாக உள்ள, தற்போது அரசு, மேலும் 1,200 படை வீரர்களை அனுப்பியுள்ளது என செய்திகள் கூறுகின்றன. பாப்புவா பல்கலைக்கழக மாணவர்கள் மீது, கழுதைகள், பன்றிகள், நாய்கள் போன்ற சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டால், வன்முறை வெடித்துள்ளது.

முன்னாள் டச்சு காலனியாகிய பாப்புவா மற்றும், மேற்கு பாப்புவா மாநிலங்கள், 1961ம் ஆண்டில் சுதந்திரமடைந்தன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2019, 14:07