தேடுதல்

அமெரிக்க ஐக்கி நாட்டின் இஸ்பானிய அமெரிக்க கத்தோலிக்கர்கள் அமெரிக்க ஐக்கி நாட்டின் இஸ்பானிய அமெரிக்க கத்தோலிக்கர்கள் 

புலம்பெயர்ந்தோர் குறித்த அரசின் புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு

அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைகளில் புகலிடம் தேடுவோர் மீது, அரசு நடந்துகொள்ளும் விதம், நாட்டின் நன்னெறிப் பண்புக்கு முன்வைக்கப்படும் பரிசோதனையாக உள்ளது – ஆயர் வாஸ்கெஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நலிவுற்ற தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை இன்னல்களுக்குள் இட்டுச்செல்லும், புகலிடம் வழங்கும் முறையை தகர்க்கும், புதிய விதிமுறையை அகற்றுமாறு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுத் தலைவர், அரசை வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் புலம்பெயர்தோர்க்கு தஞ்சம் அளிப்பது குறித்த அமைப்புமுறையை, ஏறக்குறைய வெறுமையாக்கும், “இடைக்கால இறுதி விதிமுறை” ஒன்றை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் நிர்வாகம், கடந்த ஜூலை 16ம் தேதி அறிவித்தது. அந்த விதிமுறை குறித்த கருத்துக்களை முப்பது நாள்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டது. 

இந்த விதிமுறை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, புலம்பெயர்ந்தோர் பணிக்குழுத் தலைவர், Austin ஆயர் ஜோ வாஸ்கெஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் எல்லையிலிருந்து, நாட்டிற்குள் புகலிடம் தேடும் நபர்களை தடை செய்வதற்கு, இந்த விதிமுறை, அரசுக்கு அனுமதியளிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

இந்த விதிமுறை முற்றிலும் சட்டத்திற்கு முரணானது, அநீதியானது மற்றும், விவேகமற்றது என்று குறை கூறியுள்ள ஆயர் வாஸ்கெஸ் அவர்கள், நாட்டின் தெற்கு எல்லையில், உண்மையிலேயே புகலிடம் கேட்பதற்குத் தகுதியுடையவர்களை,  இந்த விதிமுறை கட்டுப்படுத்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அரசின் இந்த புதிய விதிமுறை குறித்து, ஆயர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர் என்றும், அமெரிக்க நிர்வாகம், இந்த விதிமுறையை இரத்து செய்யுமாறும், ஆயர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2019, 15:03