தேடுதல்

பிரான்ஸ் சுற்றுச்சூழல் மற்றும் மின்சாரம் பிரான்ஸ் சுற்றுச்சூழல் மற்றும் மின்சாரம் 

படைப்பைப் பாதுகாக்கும் அர்ப்பணத்தைப் புதுப்பிக்க...

இங்கிலாந்து மற்றும், வேல்ஸ் கத்தோலிக்க சமுதாயம், காலநிலை மாற்றத்தைக் கண்முன்கொண்டு, புதியதொரு வாழ்வுமுறையைப் பின்பற்றுமாறு, ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தனிப்பட்ட முறையிலும், குடும்ப வாழ்விலும், சூழலியலின் கிறிஸ்தவ ஆன்மீகத்தை ஊக்குவித்து, அது வளர்க்கப்பட வேண்டும் என்று, இங்கிலாந்து மற்றும், வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்கள், தங்களின் புதிய அறிக்கையில் கூறியுள்ளனர்.

சுற்றுச்சூழல் மாற்றத்தால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகரித்துவரும்வேளை, இங்கிலாந்து மற்றும், வேல்ஸ் கத்தோலிக்க சமுதாயம், இதனைக் கருத்தில் ஏற்று, புதியதொரு வாழ்வுமுறையைப் பின்பற்றுமாறு, ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வாழும் முறையை மாற்றுவதன் வழியாக, படைப்பைப் பாதுகாப்பதில், கத்தோலிக்கர் தலைமைத்துவத்தைக் கொண்டிருக்க முடியும் என்றுரைக்கும் ஆயர்கள், திருத்தந்தையின், இயற்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும், Laudato Si’ அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலையும் மேற்கோள் காட்டியுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும், வேல்ஸிலுள்ள 20 கத்தோலிக்க மறைமாவட்டங்களின், 2,800 ஆலயங்களில், பசுமை எரிவாயுவும், புதுப்பிக்கத்தக்க மின்சாரமும் விநியோகிக்கப்படுகின்றன.

இதற்கிடையே, பிரித்தானிய பசுமை எரிவாயு அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, பிரிட்டனில், 4,500க்கும் அதிகமான கத்தோலிக்க ஆலயங்களும், பள்ளிகளும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் பசுமை எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன.

2,200க்கும் அதிகமான பள்ளிகள், நலவாழ்வு மற்றும் சமுதாய மையங்கள், பிரித்தானிய பசுமை எரிவாயு அமைப்போடு ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2019, 15:55