தேடுதல்

ஜப்பானுக்கு எதிராக செயோலில் போராட்டம் ஜப்பானுக்கு எதிராக செயோலில் போராட்டம்  

ஜப்பான்-தென் கொரியப் பிரச்சனைகளைக் கையாள்வதில் உரையாடல்

ஜப்பானும், கொரியாவும், முக்கியமான அண்டை நாட்டவர்களாக இருக்க வேண்டும், அரசியல்வாதிகள் கடுமையாய்ச் செயல்பட்டு, மக்களின் நட்புகளைச் சேதப்படுத்தக் கூடாது – ஜப்பான் ஆயர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஜப்பானுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே, இன்னும் தீர்க்கப்படாத கடந்தகால விவகாரங்களைக் கையாள்வதில், பதட்டநிலைகளைக் குறைத்து அமைதியாக, அறிவார்ந்த உரையாடலை மேற்கொள்ளுமாறு, இவ்விரு நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், ஜப்பான் ஆயர் ஒருவர்.

ஜப்பான் மற்றும், கொரிய அரசுகளின் உறவுகளில், ஒப்புரவை நோக்கி என்ற தலைப்பில், ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளில், கடந்த வாரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள, ஜப்பான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுத் தலைவர், Sapporo ஆயர் Taiji Katsuya அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்விரு நாடுகளுக்கும் இடையே வரத்தகம் சார்ந்த சர்ச்சை மோசமாகி வருவதற்கு, ஜப்பானின் போர்க்கால நடவடிக்கைகளை வைத்து, கொரியாவில் நிலவும் கோப உணர்வே காரணம் என்று சொல்லப்படுகிறது.   

போர்க்காலங்களில், கொரியாவில் ஜப்பானியர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கேட்பதற்கு நாட்டிற்கு உரிமை உள்ளது என்ற விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டது. ஆயினும், தனியாட்கள் இழப்பீடு கேட்பதற்குரிய உரிமை பற்றிய விவகாரத்திற்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று யூக்கா செய்தி கூறுகின்றது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2019, 16:00