தேடுதல்

எருசலேமில் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகள் (கோப்பு படம்) எருசலேமில் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகள் (கோப்பு படம்) 

போரைத் தவிர்த்து, உரையாடலை மேற்கொள்ள...

அமெரிக்க ஐக்கிய நாடு, ஈரான் நாட்டுடன், அரசியல் வழி உரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்றும், போரைத் தவிர்க்கவேண்டும் என்றும், அந்நாட்டின் அனைத்து மதத்தலைவர்களின் விண்ணப்பம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாடு, ஈரான் நாட்டுடன், அரசியல் வழி உரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்றும், போரைத் தவிர்க்கவேண்டும் என்றும், அந்நாட்டின் அனைத்து மதத்தலைவர்களும் அந்நாட்டு அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூண்டால், அது பெரும் அழிவைக் கொணரும் என்றும், நன்னெறி வழியிலும், மதங்களின் அடிப்படையிலும் போரை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும், மதத் தலைவர்களின் விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

“பாதாளத்தின் விளிம்பிலிருந்து மீண்டும்: ஈரானுடன் போர் இல்லை” என்ற தலைப்பில், மதத் தலைவர்கள் விடுத்துள்ள இவ்வறிக்கை, "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்" (மத். 5:9) என்ற நற்செய்தி வாக்குடன் ஆரம்பாகிறது.

அனைத்து மதங்களும் போருக்கு எதிராக அறிவுரை வழங்குகின்றன என்பதை மனதில் கொண்டு, அனைத்து மதங்களின் பிரதிநிதிகளும் இணைந்து வந்து, இந்நேரத்தில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என்று, மதத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2019, 15:38