லொரேத்தோவில் திருத்தந்தை மேற்கொண்ட திருப்பயணம் லொரேத்தோவில் திருத்தந்தை மேற்கொண்ட திருப்பயணம் 

நேரடி ஒளிபரப்பில், லொரேத்தோ திருத்தலத் திருப்பலி

லொரேத்தோவில், அன்னை மரியா வாழ்ந்து வந்ததாகக் கருதப்படும் இல்லத்தில், காலை 7.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியை மக்களின் இல்லங்களுக்கு கொண்டு செல்வது, மிகுந்த மகிழ்வைத் தருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புகழ்பெற்ற அன்னை மரியாவின் திருத்தலமான லொரேத்தோவில், அன்னை மரியா வாழ்ந்து வந்ததாகக் கருதப்படும் இல்லத்தில், திங்கள் முதல் சனிக்கிழமை முடிய, காலையில் நடைபெறும் திருப்பலியை, Telepace என்ற நிறுவனம், நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது.

ஜூலை மாதத் துவக்கத்திலிருந்து ஆரம்பமான இந்த ஒளிபரப்பு, லொரேத்தோ அன்னை மரியாவின் இல்லத்தில், காலை 7.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியை மக்களின் இல்லங்களுக்கு கொண்டு செல்வது மிகுந்த மகிழ்வைத் தருகிறது என்று, இத்திருத்தலத்தின் பாப்பிறை பிரதிநிதி, பேராயர் Fabio Dal Cin அவர்கள் கூறினார்.

1977ம் ஆண்டு, Radiopace என்ற பெயருடன் ஆரம்பமான சமூகத் தொடர்பு நிறுவனம், பின்னர் Telepace என்ற பெயருடன் இயங்கி வருவதையும், இந்நிறுவனத்தின் ஒரு முக்கிய பணியாக, லொரேத்தோ திருத்தலத்தின் நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு செல்வது, பெரும் நிறைவைத் தருகிறது என்பதையும், இந்நிறுவனத்தின் இயக்குனர் Guido Todeschini அவர்கள் கூறினார்.

Telepace நிறுவனம், 2016ம் ஆண்டு முதல், திங்கள் முதல் வெள்ளி முடிய, இறை இரக்கத்தின் பக்தி முயற்சிகளை, பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2019, 14:47