வெள்ளம் சூழ்ந்த அஸ்ஸாம் கிராமங்களில் மக்கள் வெளியேறும் காட்சி வெள்ளம் சூழ்ந்த அஸ்ஸாம் கிராமங்களில் மக்கள் வெளியேறும் காட்சி 

வெள்ளத்தால் சூழ்ந்திருக்கும் வட இந்தியாவில் காரித்தாஸ்

இந்தியாவின் பீகார், மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் உருவாகியுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இந்தியக் காரித்தாஸ் அமைப்பு உதவிகளை ஆற்றிவருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் பீகார், மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் உருவாகியுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இந்தியக் காரித்தாஸ் அமைப்பு உதவிகளை ஆற்றிவருகிறது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

இந்த மாதத் துவக்கத்திலிருந்து பெய்துள்ள கன மழையாலும், வெள்ளத்தாலும், பீகார், மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில், 1 கோடியே 20 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், அருள்பணி பால் மூஞ்ஜெலி (Paul Moonjely) அவர்கள் கூறியுள்ளார்.

பிரம்மபுத்ரா, மற்றும் கங்கை நதிகளில் வெள்ளம் கரை கடந்து செல்வதால், 8,246 கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன என்றும், அஸ்ஸாம் மாநிலத்தில், 90 விழுக்காட்டு மக்களுக்கு, குடி நீர் பிரச்சனை பெருமளவில் உருவாகியுள்ளது என்றும், காரித்தாஸ் இயக்குனர் கூறியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 7000 குடும்பங்களுக்கு, காரித்தாஸ் அமைப்பு, உதவிகள் வழங்கி வருவதாக, அருள்பணி பால் மூஞ்ஜெலி அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2019, 14:22