தேடுதல்

Vatican News
கர்தினால் Beshara Al-Rahi (வலது பக்கம்) கர்தினால் Beshara Al-Rahi (வலது பக்கம்) 

உலகப் பொருட்கள் மீதான சிலைவழிபாடு

அதிகாரம், பணம், ஆயுதங்கள், சுயவழிபாடு, போதைப்பொருள், மதுபானம், பரத்தமை போன்ற சிலைவழிபாடுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அதிகாரம், பணம் என்ற சிலை வழிபாட்டிற்கு தங்களை விற்றுவிட வேண்டாம் என லெபனன் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு கர்தினால் Beshara Al-Rahi.

ஒன்றிப்பின் அடையாளமாக இருந்த லெபனான் நாட்டு பிரபல புனிதர் Charbel அவர்களின் திருவிழாக்கொண்டாட்டங்களில் பங்குபெற்ற லெபனான் அரசுத்தலைவர் Michel Aoun, மற்றும், அரசு அதிகாரிகளுக்கு உரை வழங்கிய மேரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் Al-Rahi அவர்கள், உலகப் பொருட்களே பெரிதென எண்ணி வழிபடும் நிலைகளால், அரசியல் அதிகாரம் கீழ்மைப்படுவதுடன், இலஞ்ச ஊழல் புரிவோரின் சார்பானதாக நீதியும் வளைக்கப்படுகிறது என குற்றஞ்சாட்டினார்.

இன்றைய சமுதாயத்தில், அதிகாரம், பணம், ஆயுதங்கள், சுயவழிபாடு, போதைப்பொருள், மதுபானம், பரத்தமை போன்ற சிலைவழிபாடுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து, அவர்களின் ஒழுக்கநெறி மதிப்பீடுகள் குறித்த உள்ளுணர்வுகளை மழுங்கச் செய்கின்றன என்ற கவலையையும் வெளியிட்டார் கர்தினால் Al-Rahi.

ஒழுக்கச் சீர்கேடடைந்த மனிதர்களாலேயே அரசு நிர்வாகம், ஒழுக்க மதிப்பீடுகளை இழந்துள்ளது எனவும் குற்றஞ்சாட்டிய கர்தினால், இல்ஞ்ச ஊழலை எதிர்த்து ஒவ்வொருவரும் உள்ளுக்குள்ளேயேப் போராட வேண்டியுள்ளது என அழைப்பு விடுத்தார். (AsiaNews)

23 July 2019, 13:59