ஈராக் கொடியுடன் அந்நாட்டு சிறார் ஈராக் கொடியுடன் அந்நாட்டு சிறார் 

ஈராக் காரித்தாஸ் அமைப்பின் பணிகள்

போரால் மன அளவில் பாதிக்கப்பட்டுள்ள 2000 தாய்மார்களுக்கும், நல ஆதரவுப் பணிகளை 12,000 பேருக்கும், கல்விப்பணியை 6,000 குழந்தைகளுக்கும் வழங்கிவரும் ஈராக் காரித்தாஸ் அமைப்பு, 12,000 வீடுகளை சீரமைத்து வழங்கியுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாடு, மெதுவாக முன்னேறி வந்தாலும், ஏழ்மை, குடிபெயர்வு, பரவலான இலஞ்ச ஊழல், நிர்வாக நெருக்கடி போன்ற பிரச்சனைகளுடன் போராட வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார், அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், நபில் நிஸ்ஸான் (Nabil Nissan).

ஈராக்கில் துன்புறும் மக்களிடையே, 1992ம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு உதவிப்பணிகளை ஆற்றிவரும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்றவும் தன் பணிகளை அதிகரித்துள்ளது என்று நிஸ்ஸான் அவர்கள் கூறினார்.

போரால் மன அளவில் பாதிக்கப்பட்டுள்ள 2000 தாய்மார்களுக்கும், நல ஆதரவுப் பணிகளை 12,000 பேருக்கும், கல்விப்பணியை 6,000 குழந்தைகளுக்கும் வழங்கிவரும் காரித்தாஸ் அமைப்பு, 12,000 வீடுகளை சீரமைத்து வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

ஈராக் நாட்டில் 17 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தோராக வாழ்வது, ஆயிரக்கணக்கான இளையோர் வேலைவாய்ப்பின்றி இருப்பது, 30 இலட்சம் பேர் மாற்றுத் திறனாளிகளாக இருப்பது, 15 இலட்சம் பேர், பெற்றோரை இழந்து வாழ்வது, 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் கைம்பெண்களாக வாழ்வது என, ஈராக் நாடு சந்திக்கும் பிரச்சனைகள் அதிகமாகவே உள்ளன என்று, ஈராக் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், நபில் நிஸ்ஸான் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2019, 15:35