வியட்நாம் கம்யூனிச ஆட்சியில் மறைப்பணியாளர்கள் வியட்நாம் கம்யூனிச ஆட்சியில் மறைப்பணியாளர்கள்  

நேர்காணல்–வியட்நாமில் மறைப்பணி அனுபவம்-பகுதி 2

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆதரவுடன் தென் வியட்நாமும், சீனா, சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் வட வியட்நாமும் போரிட்டன. இப்போரில், அமெரிக்க ஐக்கிய நாட்டு படைவீரர்கள் மட்டும், 2,00,000 முதல், 2,50,000 பேர் வரை இறந்தனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

வட வியட்நாமுக்கும் தென் வியட்நாமுக்கும் இடையே, 1955ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று தொடங்கிய வியட்நாம் போர் அல்லது, இரண்டாவது இந்தோ சீனப் போர்,  1975ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி முடிவடைந்தது. இப்போரில், வியட்நாம் மக்கள் மட்டும், ஏறத்தாழ 3,65,000 பேர் வரை இறந்தனர் என, ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது.   இப்போருக்குப் பின்னர், இரு வியட்நாம் நாடுகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு, கம்யூனிச நாடானது. அதைத் தொடர்ந்து மத சுதந்திரமும் மறுக்கப்பட்டது. வியட்நாமில், ஒன்பது ஆண்டுகள் மறைப்பணியாற்றியுள்ள, அருள்பணி பெலிக்ஸ் மைக்கிள் அவர்கள், அந்நாட்டின் மத சுதந்திரம் மற்றும் இப்போதைய கத்தோலிக்கரின் நிலை பற்றி பகிர்ந்து கொள்கிறார். அருள்பணி பெலிக்ஸ் அவர்கள், அன்பின் பணியாளர் சபையைச் சார்ந்தவர்.

நேர்காணல்–வியட்நாமில் மறைப்பணி அனுபவம்-பகுதி 2

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2019, 15:18