தேடுதல்

Laudato Si பன்னாட்டு கருத்தரங்கு பிரதிநிதிகள் சந்திப்பு Laudato Si பன்னாட்டு கருத்தரங்கு பிரதிநிதிகள் சந்திப்பு 

நேர்காணல் – Laudato Si வத்திக்கான் பன்னாட்டு கருத்தரங்கு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato Si திருமடல் வெளியிடப்பட்ட 4ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, Centesimus Annus Pro Pontifice அமைப்பு, வத்திக்கானில் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை அண்மையில் நடத்தியது

மேரி தெரேசா - வத்திக்கான்

Laudato Si (24 மே,2015) “இறைவா உமக்கே புகழ்” என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருமடல் வெளியிடப்பட்ட நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, Centesimus Annus Pro Pontifice எனப்படும் பாப்பிறைக்கு ஆதரவான அமைப்பு, வத்திக்கானில் அண்மையில், பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இதில் கலந்துகொண்ட அருள்பணி டேவிட் அவர்கள், இக்கருத்தரங்கு பற்றியும், இவரின் முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை பற்றியும் இன்று பகிர்ந்துகொள்கிறார். சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி டேவிட் அவர்கள், தற்போது, தெற்கு ஜெர்மனியில், Stuttgart மறைமாவட்டத்தில் ஒரு பங்கில் உதவி பங்குத்தந்தையாகப் பணியாற்றி வருகிறார். அதோடு, Tubingen பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரின் இரண்டாவது தலைமுறை என்ற தலைப்பில், முனைவர் பட்ட ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்

நேர்காணல் – Laudato Si பன்னாட்டு கருத்தரங்கு

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2019, 15:36