தேடுதல்

பிலிப்பைன்ஸ் நாட்டில் உரிமைகளுக்கான போராட்டம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உரிமைகளுக்கான போராட்டம் 

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் போராடிவரும் மக்களுக்கு ஆதரவு

ஆயர் Mangalinao - தனது வாழ்வுக்கு எந்தவித ஆபத்து வந்தாலும், இலக்கு மக்களுக்கு வழங்கும் ஆதரவைக் கைவிடப் போவதில்லை

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில், இயற்கை அழிக்கப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு, தனது முழு ஆதரவைத் தெரிவித்து வருகிறார் அந்நாட்டு ஆயர் Jose Elmer Imas Mangalinao.

பிலிப்பைன்ஸ்  தலைநகர் மனிலாவுக்கு 335 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள Didipio கிராம மக்கள், தங்கள் நிலப்பகுதிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள பெரிய சுரங்க வேலைகளை நிறுத்தும் நோக்கத்தில், தடைச்சுவர்களை எழுப்பி, போராடி வருகின்றனர்.

தனது மறைமாவட்டத்தைச் சேர்ந்த இந்தப் பகுதி மக்களுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ள, ஆயர் Mangalinao அவர்கள், தனது வாழ்வுக்கு எந்தவித ஆபத்து வந்தாலும் தனது ஆதரவைக் கைவிடப் போவதில்லை என உறுதியளித்துள்ளார்.

சுரங்கத்தொழிலும், இயற்கையும் ஒன்றுக்கொன்று எதிரிகள் என்றுரைத்துள்ள ஆயர் Mangalinao அவர்கள், OceanaGold நிறுவனத்தின் சுரங்கப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதி மக்களுக்கும் பணியாற்றுவதாக உள்ளது எனவும், எனது இறையன்பை வெளிப்படுத்துவதற்குச் சிறந்த வழிகளில் ஒன்றாக இதனைக் கருதுவதாகவும் கூறியுள்ளார்.

Nueva Vizcaya மாநிலத்தில், 12 ஆயிரத்திற்கு அதிகமான ஹெக்டர் நிலப்பரப்பு, ஆஸ்திரேலிய Didipio Gold-Copper சுரங்க நிறுவனத்திற்கு உரியது. இதன் உரிமம் ஜூன் மாதம் 22ம் தேதியோடு முடிவடைந்தாலும், அந்நிறுவனம் தொடர்ந்து தங்கத்தையும், தாமிரத்தையும் வெட்டி வருகின்றது என செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2019, 16:33