மும்பை கன மழையில் இடிந்து விழுந்த சுவர் மும்பை கன மழையில் இடிந்து விழுந்த சுவர் 

மும்பை கனமழையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கர்தினால் கிரேசியஸ்

மும்பையில் தொடர்ந்து பெய்த கனமழையால், ஜூலை 2ம் தேதி, Malad Eastல், எதிர்பாராத விதமாக சுவர் இடிந்ததில் 18 பேர் உயிரிழந்தனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் மும்பையில் பெய்த கனமழையில் சுவர் இடிந்ததால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் சொன்னார், மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

மும்பை புறநகரின் வடக்கேயுள்ள Malad Eastல் சுவர் இடிந்ததில், 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மக்களின் உறவினர்கள், இந்த விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் என, ஏறத்தாழ நூறு பேரை, புனித யூதா ததேயு ஆலயத்தில் சந்தித்து, நிவாரண உதவிகளையும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் வழங்கினார்.

இந்த மக்களுக்கு திருஅவை எப்போதும் ஆதரவாக இருக்கும் என்பதற்கு உறுதியளித்த   கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மும்பை உயர்மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குத்தளங்கள் அளித்துள்ள நன்கொடைகளுடன், மேலும் 15 இலட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.

மும்பையில் தொடர்ந்து பெய்த கனமழையால், ஜூலை 2ம் தேதி எதிர்பாராத விதமாக சுவர்                இடிந்தது. இதில் 18 பேர் இறந்தனர். உடனடியாக, பல கத்தோலிக்கர் நிதி திரட்டி, இடர்துடைப்புப் பணிகளை மேற்கொண்டனர் என்று ஆசியச் செய்தி கூறியது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2019, 16:39