தேடுதல்

Vatican News
பங்களாதேஷில் கனமழை பங்களாதேஷில் கனமழை  (AFP or licensors)

பங்களாதேஷ் இடர்துடைப்பு பணியில் காரித்தாஸ்

இலங்கையில் அண்மை வாரங்களில் பெய்த கனமழை மற்றும், நிலச்சரிவுகளில், 9 மாநிலங்களில் 5,67,000 மக்களுக்குமேல் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

தென்கிழக்கு ஆசியாவில் பெய்துவரும் பருவமழையால் பல பகுதிகள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளவேளை, பங்களாதேஷில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, இடர்துடைப்புப் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளது என்று, ஆசியச் செய்தி கூறுகிறது.

பங்களாதேஷில் ஒவ்வொரு மணிக்கும் அதிகரித்து வரும் கனமழையால், அந்நாட்டின் 64 மாவட்டங்களில் 21, கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளன, தெருக்களில் வெள்ளம் புகுந்து கிராமங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன மற்றும் நாடு, கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.   

இப்பேரிடரால், அவசரகால உதவிகளை எதிர்நோக்கியிருக்கும் அந்நாட்டில், உதவிகள் அதிகம் தேவைப்படும் பகுதிகளில், நிவாரணப் பணிகளை ஆற்றி வருகின்றது, காரித்தாஸ் அமைப்பு.

பங்களாதேஷில் பெய்துவரும் கனமழையால், ஏறத்தாழ 73,400 வீடுகளும், 36 ஆயிரம் ஹெக்டர் அறுவடையும் சேதமடைந்துள்ளன (AsiaNews)

20 July 2019, 14:26