லெபனான் நாட்டில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் - கோப்புப் படம் லெபனான் நாட்டில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் - கோப்புப் படம் 

குறைந்துவரும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை

லெபனன் நாடு தவிர, மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளிலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துவருகிறது - மாரனைட் வழிபாட்டுமுறை ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

லெபனன் நாடு தவிர, மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளிலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துவருவதாக, கடந்த வார இறுதியில் முடிவடைந்த மாரனைட் வழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபை ஆயர்களின் ஆண்டு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

சிரியா, ஜோர்டன், புனித பூமி, எகிப்து மற்றும் சைப்ரஸின் ஆயர் இல்லங்களிலிருந்து வந்த செய்திகளின்படி, மத்தியக் கிழக்குப் பகுதிகளில் நிகழ்ந்துவரும் போர், பொருளாதர நிலை, பாதுகாப்பின்மை, கொள்கை அளவிலான நிர்ப்பந்தம் போன்ற காரணங்களால் மக்கள் வெளியேறி வருவதாகவும், அதனால், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாகவும், மாரனைட் ஆயர் மன்றம் அறிவித்துள்ளது.

சிரியாவின் அலெப்போ நகரில், 2013ம் ஆண்டு துவங்கிய போருக்கு முன்னர் நான்கு இலட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்ந்திருக்க, தற்போதோ அவ்வெண்ணிக்கை வெறும் பத்து விழுக்காட்டிற்கும் குறைவாக, அதாவது 40,000 ஆகியுள்ளதாக ஆயர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போர்களால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை தொடர்ந்து வந்தாலும், அவர்களை பாதுகாக்கவும், அவர்களின் துயர்களை அகற்றவும், மனந்தளராமல் தங்களால் ஆன அனைத்தையும் கிறிஸ்தவ சபைகள் ஆற்றிவருவதாக மாரனைட் ஆயர்களின் அறிக்கை மேலும் கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2019, 16:09