தேடுதல்

Vatican News
ஐவரி கோஸ்ட் நாட்டில், ஆப்ரிக்க குழந்தைகள் உலக தினக் கோண்டாட்டம். - ஜூன் 16. ஐவரி கோஸ்ட் நாட்டில், ஆப்ரிக்க குழந்தைகள் உலக தினக் கோண்டாட்டம். - ஜூன் 16.  (ANSA)

ஐவரி கோஸ்ட் தேர்தல் அமைதியாக நடைபெற...

ஐவரி கோஸ்ட் மக்களுக்கு, தற்போது தேவைப்படுவது, ஒப்புரவும், ஒருங்கிணைப்பும் அன்றி, மற்றுமொரு போர் அல்ல - அந்நாட்டு ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அடுத்த ஆண்டு, ஐவரி கோஸ்ட் நாட்டில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளதையொட்டி, அந்நாட்டில் தற்போதே மோதல்கள் துவங்கியுள்ளது குறித்து, அந்நாட்டு ஆயர்கள், தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் இடம்பெறவிருக்கும் தேர்தலைக் குறித்து அச்சம் கொண்டுள்ள மக்கள், இனங்களுக்கிடையே மோதல், பாதுகாப்பின்மை, நில உடமையுரிமை, காடுகள் ஆக்ரமிப்பு, சட்டவிரோத சுரங்கத் தொழில் போன்ற ஆபத்துக்களை எண்ணி கலக்கம் அடைந்துள்ளனர் என்று, ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

இருபது ஆண்டுகளாக நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ஐவரி கோஸ்ட் மக்களுக்கு, தற்போது தேவைப்படுவது, ஒப்புரவும், ஒருங்கிணைப்பும் அன்றி, மற்றுமொரு போர் அல்ல என்று, அந்நாட்டு ஆயர்கள் தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். (Fides)

25 June 2019, 15:59