நைஜீரியாவில் மனித வர்த்தகர்களின் பொய்யான வாக்குறுதிகளைக் கேட்கும் பெண்கள் நைஜீரியாவில் மனித வர்த்தகர்களின் பொய்யான வாக்குறுதிகளைக் கேட்கும் பெண்கள் 

நேர்காணல் – நைஜீரியாவில் மனித வர்த்தகம்

அருள்பணி முனைவர் ரொசாரியோ அவர்கள், “எவ்வளவு” என்ற தலைப்பில், மனித வர்த்தகம் பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து, அதனை குறுந்தகடில் வெளியிட்டுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான்

அருள்பணி முனைவர் பிரான்சிஸ் ரொசாரியோ அவர்கள், ஆப்ரிக்க மறைபரப்பு சபையைச் சேர்ந்தவர். உரோம் நகரிலுள்ள அச்சபையின் தலைமை இல்லத்தில், இந்த மே மாதத்தில் நடைபெற்ற பொதுப்பேரவையில், பொது ஆலோசகர்களில் ஒருவராக, இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், அருள்பணி ரொசாரியோ. இவர், “எவ்வளவு (How Much)” என்ற தலைப்பில், மனித வர்த்தகம் பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து, குறுந்தகடிலும் அதனை வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படம், இத்தாலிய சட்டசபையிலும் திரையில் காட்டப்பட்டது. ஆப்ரிக்க மறைபரப்பு சபை, ஆப்ரிக்காவில் 17 நாடுகளில் மறைப்பணியாற்றி வருகின்றது.

நேர்காணல் – நைஜீரியாவில் மனித வர்த்தகம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2019, 14:38