தேடுதல்

எரித்திரியா தலத்திருஅவையின் கொண்டாட்டம் எரித்திரியா தலத்திருஅவையின் கொண்டாட்டம் 

துன்புறும் நோயாளிகளுடன் எரித்திரியா திருஅவை ஒருமைப்பாடு

எரித்திரியா அரசால் மூடப்பட்டுள்ள 22 கத்தோலிக்க மருத்துவ மையங்களை திறக்க, கத்தோலிக்கர்கள் தங்களின் செபம், மற்றும், உண்ணாநோன்பு வழியாக உதவ அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :  வத்திக்கான் செய்திகள்

எரித்திரியா நாட்டிலுள்ள 22 கத்தோலிக்க மருத்துவ உதவி மையங்களையும் மூடுவதற்கு அரசு எடுத்துள்ள முடிவு மாற்றப்படுவதற்கு, அந்நாட்டு கத்தோலிக்கர்கள், தங்கள் செபம், மற்றும், உண்ணா நோன்பு வழியாக உதவவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது எரித்திரியத் தலத்திருஅவை.

அரசுத்தலைவர் Isaias Afewerki அவர்களின் ஆட்சியை அந்நாட்டு ஆயர்கள் குறை கூறியதைத் தொடர்ந்து, கத்தோலிக்க மருத்துவ மையங்களை மூட அரசு எடுத்த முடிவை குறை கூறியுள்ள எரித்திரியாவின் அஸ்மாரா பேராயர் Abune Mengesteab Tesfamariam அவர்கள், இன்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளில் நிச்சயம் இறைவன் உதவுவார் என்ற நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வோம் எனக் கூறியுள்ளார்.

மருத்துவ மையங்கள் மூடியுள்ளதால் துன்புறும் நோயாளிகள் மற்றும் ஏனைய மக்கள் குறித்து தலத்திருஅவை ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகவும், செபம் மற்றும் உண்ணா நோன்பு வழியாக இறை உதவியை நாடுவோம் எனவும் பேராயரின் அறிக்கை அழைப்பு விடுக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2019, 16:31