தேடுதல்

மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தோரை தாங்கி வரும் கப்பல்கள் மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தோரை தாங்கி வரும் கப்பல்கள் 

மத்தியத்தரைக் கடலில் உயிரிழந்தோருக்காக செபிக்க அழைப்பு

மத்தியத்தரைக் கடலில் உயிரிழந்த புலம்பெயர்ந்த மக்களுக்காக செபிக்கும் நாளாக, இவ்வாண்டின் புலம்பெயர்ந்தோர் உலக நாளை சிறப்பிக்கவுள்ளதாக, ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மாண்புடன் கூடிய வாழ்வைத் தேடி ஐரோப்பாவுக்கு வரும் வழியில் மத்தியத்தரைக் கடலில் உயிரிழந்த புலம்பெயர்ந்த மக்களுக்காக செபிக்கும் நாளாக, இவ்வாண்டின் புலம்பெயர்ந்தோர் உலக நாளை சிறப்பிக்கவுள்ளதாக, ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஜூன் 20, வருகிற வியாழனன்று சிறப்பிக்கப்படவிருக்கும் புலம்பெயர்ந்தோர் உலக நாளையொட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு, புலம்பெயர்ந்தோர் சார்பாக விண்ணப்பித்துள்ளது.

மாண்புடன் கூடிய வாழ்வைத் தேடி ஐரோப்பாவுக்கு வருகை தரும் புலம்பெயர்ந்தோர், வரும் வழியில் மத்திய தரைக்கடலில் உயிரிழக்கும் கொடுமை தொடர்கிறது என்றும், உயிரிழந்தோரின் நினைவாக ஐரோப்பாவின் அனைத்துப் பங்குதளங்களிலும் இவ்வியாழனன்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவேண்டும் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இயேசுவின் விண்ணேற்றத்தையும், தூயஆவியாரின் வருகையையும் உள்ளடக்கிய இந்த விழாக்காலத்திலும், மத்தியத்தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் உயிரிழந்து வருவது குறித்த செய்திகள் வந்த வண்ணம் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது எனக் கூறும் இவ்வறிக்கை, புலம் பெயரும் வழியில் மத்தியதரைக் கடலில் உயிரிழந்த அனைத்து மக்களையும், இனம், மதம் நாடு என்ற வேறுபாடுகள் ஏதுமின்றி, இந்நேரத்தில் நினைவுகூர்ந்து, அவர்களுக்காக செபிப்போம் என விண்ணப்பித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2019, 16:05