தேடுதல்

Vatican News
திருப்பலி நிறைவேற்றும் கர்தினால் Andrew Yeom Soo-Jung திருப்பலி நிறைவேற்றும் கர்தினால் Andrew Yeom Soo-Jung  (ANSA)

செபம், மன்னிப்பு, மற்றும், ஒப்புரவு வழியாக அமைதியைக் கொணர

1950ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி வடகொரியா தென்கொரியா மீது போரைத் துவக்கியதை நினைவுகூரும்வண்ணம் தேசிய செப நாள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :  வத்திக்கான் செய்திகள்

செபம், மன்னிப்பு, மற்றும், ஒப்புரவு வழியாக, கொரிய தீப கற்பத்தில், அமைதியைக் கொணர இயலும் என தென்கொரியாவில் இடம்பெற்ற அமைதி திருப்பலியில் மறையுரையாற்றினார், கர்தினால் Andrew Yeom Soo-Jung.

1950ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி வடகொரியா நாடு தென்கொரியா மீது போரைத் துவக்கியதை நினைவுகூரும்வண்ணம், இச்செவ்வாயன்று, தேசிய செப நாளை சிறப்பித்த தென் கொரியத் திருஅவை, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புரவு நிலவ, செபமாலை, மற்றும், திருப்பலிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழித்து, இரு கொரிய நாடுகளிடையே ஒப்புரவை உருவாக்க, கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட முயற்சிகள், எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தவில்லையெனினும், செபத்தின் வழியாக இதற்கு உதவமுடியும் என தன் மறையுரையில் குறிப்பிட்டார் கர்தினால் Yeom Soo-Jung.

கொரிய பிரிவினைக்கு முன்னர் வட கொரியாவில் இருந்த 57 பங்குதளங்கள், மற்றும், 52 ஆயிரம் விசுவாசிகளை மனதில் கொண்டு அந்நாட்டு தலத் திருஅவைக்காக ஒவ்வொரு தென்கொரியக் கத்தோலிக்கரும் செபிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார், Seoul பேராயர், கர்தினால் Yeom Soo-Jung.

25 June 2019, 16:37