அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிகோ எல்லைச் சுவர் அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிகோ எல்லைச் சுவர் 

குடிபெயர்ந்தவர்கள், பணமாக பயன்படுத்தப்படக் கூடாது

ஒவ்வொரு நாட்டின் நலன், அந்த நாடு அமைந்துள்ள அனைத்துப் பகுதியின் நலனை நோக்கியதாக அமைய வேண்டும். நாம் எல்லாரும் சகோதரர் சகோதரிகளாக ஒன்றிணைந்து நடைபயில்வதிலே வருங்காலம் அமைந்துள்ளது - மெக்சிகோ ஆயர்கள்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

குடிபெயர்ந்த நம் சகோதரர் சகோதரிகள், பணமாக ஒருபோதும் பயன்படுத்தப்படக் கூடாது என்று, மெக்சிகோ கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுங்கவரிகள் மற்றும், குடிபெயர்தல் கொள்கை குறித்து, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், மெக்சிகோ நாட்டிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதையொட்டி, மெக்சிகோ ஆயர் பேரவை சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நிர்வாகக் குழுவினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம், அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்ற உரிமையை ஏற்று, அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற, நம் பொதுவான உறுதிபாட்டிற்கு ஒத்ததாக இல்லை என்று கவலை தெரிவித்துள்ள ஆயர்கள், குடிபெயர்ந்த நம் சகோதரர் சகோதரிகள் எல்லாரும், உண்மையான மனிதாபிமானத்தோடு வரவேற்கப்படவில்லை என்றும் குறை கூறியுள்ளனர்.

நாட்டின் தெற்கு எல்லையில், ஆறாயிரம் தேசிய பாதுகாப்பு காவலர்களை அமர்த்தும் திட்டம், குடிபெயர்வுக்குரிய உண்மையான காரணங்களைக் களைவதாக இல்லை என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2019, 15:10