தேடுதல்

அன்னை மரியா திருவுருவத்தை வைத்திருக்கும் பிலிப்பைன்ஸ் மக்கள் அன்னை மரியா திருவுருவத்தை வைத்திருக்கும் பிலிப்பைன்ஸ் மக்கள் 

பிலிப்பைன்ஸ் - மரியாவின் பிறப்பு விழா தேசிய விடுமுறையாக...

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1942ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதியன்று, அன்னை மரியாவை, பிலிப்பைன்சின் முக்கிய பாதுகாவலராக அறிவித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையில் செப்டம்பர் 8ம் நாள் சிறப்பிக்கப்படும், அன்னை மரியாவின் பிறப்பு விழா நாளை, தேசிய விடுமுறையாக அறிவிப்பதற்கு, பிலிப்பைன்ஸ் செனட் அவை இசைவு தெரிவித்துள்ளது.

மே 20, இத்திங்களன்று பிலிப்பைன்ஸ் செனட் அவையில், அதன் உறுப்பினர் Rodolfo Farinas அவர்கள், சமர்ப்பித்த சட்ட வரைவுக்கு, ஒரே மனதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சட்ட வரைவில், அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தர்தே அவர்கள் கையெழுத்திட்டால், இது அந்நாட்டில் தேசிய விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படும்,

திருஅவையில், டிசம்பர் 8ம் நாள் சிறப்பிக்கப்படும் அன்னை மரியாவின் அமல உற்பவம் விழா, பிலிப்பைன்சில் ஏற்கனவே தேசிய விடுமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை நாள், 2017ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 8ம் தேதி குறித்து, தற்போது செனட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட வரைவுக்கு, அரசுத்தலைவர் இசைவு தெரிவித்தால், பிலிப்பைன்சில் மரியாவின் இரு விழா நாள்கள், தேசிய விடுமுறைகளாக அமையும்.  

அன்னை மரியாவை, பிலிப்பைன்சின் முக்கிய பாதுகாவலராக, 1942ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதியன்று, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், தனது திருத்தூது அறிக்கை வழியாக அறிவித்தார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2019, 15:27