தேடுதல்

Vatican News
சமுதாய ஊடகம் சமுதாய ஊடகம்   (AFP or licensors)

கிறிஸ்துவை மையம் கொண்ட கத்தோலிக்க ஊடகவியல்

உண்மையை வெறுக்கும் இன்றைய நவீன உலகில், உண்மையை எடுத்துரைத்து பரப்புவது ஒவ்வொரு கத்தோலிக்கரின் கடமையாக இருக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்க சமூகத் தொடர்புச் சாதனங்களின் நோக்கம், அவை ஏற்படுத்திய விளைவுகள், எதிர்நோக்கும் சவால்கள் என்பவை குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என அழைப்பு விடுத்தார், கென்ய ஆயர் Maurice Muhatia Makumba

கத்தோலிக்க ஊடகவியலாளர்களின் நோக்கமெல்லாம், இயேசு கிறிஸ்துவை மையம் கொண்டதாகவே அமைந்துள்ளன என்றுரைத்த கென்யாவின் Nakura மறைமாவட்ட ஆயர் Makumba அவர்கள், நற்செய்தி, உலகின் அனைத்து மக்களையும் சென்றடையும் நோக்கத்தில் இன்றைய நவீன சமூகத் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்த திரு அவை ஊக்கமளிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

உண்மையை வெறுக்கும் இன்றைய நவீன உலகில், உண்மையை எடுத்துரைத்து பரப்புவது, ஒவ்வொரு கத்தோலிக்கரின் கடமையாக இருக்கவேண்டும் என்பதையும், ஆயர் Makumba அவர்கள் வலியுறுத்தினார்.

எததனை இடர்கள் வந்தாலும், தங்கள் பணியில், உண்மையை எடுத்துரைக்கும் கடமையில் உறுயாக நிற்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் ஆயர்

20 May 2019, 16:05