தேடுதல்

Vatican News
ஜோர்டன் நாட்டில் இரமதான் விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்டுள்ள கடைவீதி ஜோர்டன் நாட்டில் இரமதான் விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்டுள்ள கடைவீதி  (ANSA)

இரமதான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு காரித்தாஸ் உணவு

ஜோர்டன் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கழகங்களின் ஒத்துழைப்புடன், இரமதான் மாதத்தில், முஸ்லிம்களுக்கு, சத்தான உணவு வழங்கி வருகின்றது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

தாராள மனதுள்ள ஜோர்டனில் இரமதான் வித்தியாசமாகச் சிறப்பிக்கப்படுகின்றது என்ற தலைப்பில், ஜோர்டன் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, இவ்வாண்டு இரமதான் மாத  நடவடிக்கைகளை ஆற்றி வருகின்றது.

ஜோர்டன் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு நடத்திவரும் இரக்கத்தின் உணவகம் வழாக, தெருவில் செல்லும் எல்லாருக்கும் இலவசமாக, மதிய உணவை வழங்கி வரும்வேளை, இரமதான் மாதத்தில், இதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளும், முஸ்லிம்களுக்கு, பத்தாயிரம் சூடான உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றது.

ஜோர்டன் நாட்டின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கழகங்களின் ஒத்துழைப்புடன், சுத்தமான மற்றும் சத்தான உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றது காரித்தாஸ் அமைப்பு.

இவ்வாண்டு இரமதான் நோன்பு மாதம், மே 5, கடந்த சனிக்கிழமை மாலையில் தொடங்கியுள்ளது. (Fides)

11 May 2019, 15:18