பதுவை நகரின் புனித அந்தோனியார் பசிலிக்கா பதுவை நகரின் புனித அந்தோனியார் பசிலிக்கா  

பதுவையில் இலங்கை மக்களின் திருப்பயணம்

இத்தாலியில் வாழும் இலங்கை கத்தோலிக்கர்களின் ஆண்டு திருப்பயணம், இவ்வாண்டும், மே 1ம் தேதி, பதுவை புனித அந்தோனியார் பசிலிக்காவில் ஆடம்பரத் திருப்பலியுடன் நிறைவுற்றது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில் வாழும் இலங்கை கத்தோலிக்கர்களின் ஆண்டு திருப்பயணம் இவ்வாண்டும், மே 1ம் தேதி, பதுவை நகர் புனித அந்தோனியார் பசிலிக்காவில் ஆடம்பரத் திருப்பலியுடன் நிறைவுற்றது.

மே 1, இப்புதனன்று, நண்பகல் 12 மணிக்கு, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெற்ற திருப்பலியை, Kurunegala ஆயர், ஹெரால்டு அந்தனி அவர்கள் நிறைவேற்றிய வேளையில், இலங்கை நாட்டிற்காக சிறப்பான செபங்கள் இடம்பெற்றன.

ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ளப்படும் இந்தத் திருப்பயணத்தில் கலந்துகொள்ளும் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், இவ்வாண்டு பங்கேற்க இயலாமல் போனதும், இத்தாலியில் பணியாற்றும் இலங்கையின் தூதர், Daya Palpola அவர்கள் இத்திருப்பயணத்தில் கலந்துகொண்டார் என்பதும், குறிப்பிடத்தக்கன.

உயிர்ப்புப் பெருவிழாவன்று இலங்கையில் தாக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயத்தின் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு, சிறப்பான நிதி உதவி, தற்போது திரட்டப்பட்டு வருவதாக, பதுவை நகர் புனித அந்தோனியார் திருத்தலத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2019, 14:34